பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 94 திருமுருகாற்றுப்படை விளக்கம் தந்தையையும் விட்டுப் பிரிகிறதே இல்லை. எங்கே போனலும் தாயோடுதான் செல்லுகிருள். அவளுக்குத் திருமணம் ஆகின்றது. அப்பால் கணவனேடு வாழப் புறப்பட்டு விடுகிருள். தாய் தந்தையரிடம் எவ்வளவு பற்றுடையவளாக இருந்தாலும் இப்போது கணவன் வீட்டுக்குப் போய் வாழவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. கணவனிடம் உள்ள காதல் பழைய பற்றையெல்லாம் போக்கி விடுகிறது. இவ்வளவு காலம் பழகிய உறவினர்களையும் தாய் தந்தையரையும் இடத்தை யும் விட்டுவிட்டு, இதுகாறும் பழகியறியாக ஆடவனேடு வாழப் போய்விடுகிருள். அவ்வண்ணமே ஆண்டவனிடம் காதல் மீதுார்ந்தால் எந்தப் பற்றையும் விடும் உறுதி வந்துவிடும். அவை தாமே கழுவிவிடும். செம்மல் உள்ளம் இங்கே, தான் பலகாலும் பயின்று வாழ்ந்த இடத்தை விட்டுப் புறப்பட்டிருக்கிருன் புலவன். அந்தப் புலத்தைப் .பிரிந்து எப்போதுமே வேறு இடம் சென்று தங்கிவிடும் துணிவோடு இந்தச் செலவை மேற்கொண்டிருக்கிருன். அப்படிப் பிரிவதற்கு முன்னல் வேறு ஒன்றைப் பற்றிக் கொள்ளும் உறுதி அவனுக்கு உண்டாகி யிருக்கிறது. செவ் வேலைத் திருக் கரத்தில் எந்திய செம்மேனிப் பெருமானகிய முருகனுடைய திருவடியைப் புகலிடமாகப் பற்றி வாழ வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் வேரூன்றி .யிருக்கிறது. வெறும் எண்ணமாக முளைத்தது, வலிபெற்றுக் கொள்கையாக, கடைப்பிடியாக, லட்சியமாக விளைந்திருக் கிறது. முருகனுடைய சேவடியை விருப்பத்துடன் சென்று சேரவேண்டும் என்ற எண்ணம் ஓர் உள்ளத்தில் எழுமானல் அது பெரிய உள்ளம்.