பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - திருமுருகாற்றுப்படை விளக்கம் போகிறது. அதை விட்டு வா என்ருல் அதற்குத் துணிவு உண்டாவதில்லை. இது போனல் இன்னும் மட்டமான இடமாகக் கிடைத்தால் என்ன செய்வது என்ற பயம் வேறு இருக்கிறது. சென்ம வாசனை செருப்பாலடித்தாலும் போகாது. என்பார்கள், எத்தனை படித்தாலும் கேட்டாலும் ஈம்மிடம் ஊறியிருக்கும் பழக்கத்தை விடவும், நாம் பழகிய இடத்தை விடவும் மனம் எளிதில் வராது. நற்றிணே யென்னும் சங்க நூலில் ஓர் அருமையான தொடர் வருகிறது. 'பழகிய பகையும் பிரிவு இன்னுதே' என்கின்ருர் ஒரு புலவர். பகையாக இருந்தாலும் பல காலம் பழகிவிட்டால் அதைச் சகிப்பதே வழக்கமாகி விடும். அது இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் ஏதோ குறைந்து விட்டது போன்ற உணர்ச்சி உண்டாகும். நாள்தோறும் எதிர் வீட்டுக்காரன் நம்மை மறைமுக. மாகத் திட்டிக்கொண்டே இருக்கிருன். வாசலில் வந்து காறித் துப்புகிருன் காலையில் வேலைக்குப் போகு முன்பு அரைமணி நேரம் அவனுடைய பகை முழக்கம் கேட்பது வழக்கமாகிவிடுகிறது, திடீரென்று அவன் இறந்து போகிருன். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் அவனது வசவுகளைக் காதுகேட்டுப் பழக்கமாகி விட்டமையால், இப்போது அந்த நேரத்தில் ஏதோ ஒன்றை இழந்துவிட்டது. போன்ற உணர்ச்சி உண்டாகிறது. "தினமும் எழுந்தால் அவன் ஏதாவது குரைத்துக் கொண்டிருப்பான். இப்போது: வெறிச்சென்றிருக்கிறது" என்று கூடச் சொல்கிருேம், அப்படி வெறிச் சென்றிருப்பது, எதையோ இழந்த உணர்ச்சி: இன்னமையில் அது ஒருவகை. இந்த உலகியலே. நினைந்தே அந்தச் சங்க காலத்துப் புலவர், 2. '