பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மல் உள்ளம் 97 'பழகிய பகையும் பிரிவு இன்னுதே' என்ருர், இன்னும் ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். நாம் நம் உடம்பைக கண்டு அருவருப்புக் கொள்கிறதில்லை. ஆனல் கடுமையான கோய்வாய்ப்பட்டு அங்கமெலாம் குறைந்து அழுகு தொழு நோயை உடையவர்களுக்கு இந்த உடம்பு கிச்சயமாக இன்பம் தருவதில்லை; துன்பமே தருகிறது. பிறர் கண்டால் அருவருக்கவும், தமக்குக் கணந்தோறும் துன்பத்தை உண்டாக்கவும் காரணமாக இருக்கும் அதை விடப் பெரிய பகை ஒன்று உண்டா? அதை வைத்துக் கொண்டு துன்புறுகின்றவன் அதை விட்டுவிட மனம் கொள்வதில்லை. தற்கொலை செய்துகொள்ள வழியா இல்லை? நாகரிகம் மலிய மலிய அதற்கு எத்தனையோ வழிகள் உண்டாகியிருக்கின்றன. மலேயை நாடவேண்டாம்; கடலேக் காணவேண்டாம். ரெயில் இருக்கிறது; கார்கள் இருக கின்றன; ஒரு கணத்தில் வேலையை முடித்துவிடும். ஆனல் அந்த உடம் பாகிய பகையைப் பெற்றிருப்பவர்களுக்கு அதைப் பிரிவதற்கு மனம் வருவதில்லை. இதைவிட வியட் பு வேறு உண்டா? இதை எண்ணிப் பார்த்த்ால், 'பழகிய பகையும் பிரிவு இன்னுதே' என்பது எவ்வளவு சிறந்த உண்மை என்று புலணுகும். ஆகவே, பழகிய இடத்தை விட்டு கிரந்தரமாக வேறு இடத்துக்குச் சென்று தங்குவது என்பது எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத காரியம். அதைச் செய்யத தொடங்கி யிருக்கிருன் புலவன். அழுக்கான இடத்தை விட்டு அழகான இடத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டான். ஆதலால் இந்தப் பயணம், ... " திரு-7