பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 . திருமுருகாற்றுப்படை விளக்கம் சொல்கிருள். அதுபோல் காம் அவனே அடைய வேண்டும் என்ற முயற்சியைத் தொடங்கிேைல ஆண்டவன் அருள் கூர்ந்து நமக்கு உதவி செய்ய ஓடி வருகிருன். நாம் அவனே நோக்கி ஒரடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி: நூறடி எடுத்து வைத்து வருகிருன் நம் அன்பைவிட அது எத்தனையோ பங்கு பெரிது . "திர்ந்தஅன் பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி" என்பது திருவாசகம். நம் முயற்சியை மட்டும் கணக்குப் பண்ணினல் நாம் அவனை அடைவது இன்ன காலம் என்று சொல்ல இயலாது. அவன் அருள் வந்து அணைக்கும் என்ருல், அதற்குக் கால தாமதமே வேண்டாம். எந்தக் கணத்திலும் அவனே அடைய லாம். ஆதலின் இந்தப் பயணம் கிறைவு பெறுவதென்பது. அவன் திருவுள்ளத்தைப் பொறுத்தது. அவன் கினைத்தால் இந்தப் பிறவியிலே, இந்த ஆண்டிலே, இந்த மாதத்திலே, இந்த வாரத்திலே, இன்ருகிய ஒரு நாளிலே நமக்கு கலம் உண்டாகும் என்று சொல்வது கூடப் பிழை; இந்தக் கணத்திலேயே கிடைக்கும். அதை எண்ணியே பயணம் புறப்பட்ட புலவனப் பார்த்து, . | இன்னே பெறுதி முன்னிய வினையே என்று கூறுகிருர் இன்னே-இப்பொழுதே. இதைக் காட்டிலும் விரைவான காலம் இல்லை. இது எம்முடைய, முயற்சி வேகத்தை எண்ணிச் சொன்னது அன்று; முருக னுடைய கருணே வேகத்தை கினேந்து சொன்னது. இவ்வாறு இறைவன் திருவடியை அடைவதை லட்சியமாகக் கொண்ட உண்மையான அறிவாளியைப் பார்த்து, அவன் முயற்சிக்கு ஊக்கம் ஊட்டுவாராகி,