பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருமுருகாற்றுப்படை விளக்கம் பொருள்கள் உண்டு. இங்கே எல்லாம் செம்மையாக இருக்கின்றன. முருகப்பெருமான அடையவேண்டுமென்ற ஆசை உள்ள ஒருவனுக்கு, அந்தப் பெருமானது திருவருளே முன்னே பெற்ற புலவன் வழிகாட்டுவது திருமுருகாற்றுப் படை என்பதைப் பார்த்தோம். "இறைவனேக் காண வேண்டும்' என்ற ஆர்வத்தோடு புறப்பட்ட புலவனுடைய தகுதியை, கலம்புரி கொள்கைப் புலம்பிரிங் துறையும் செலவுநீ நயந்தனை என்று காட்டினர். இறைவனுடைய திருவருக்ளப் பெற விருமபுகிறவர்கள் அங்கு ஒருகாலும், இங்கு ஒருகாலும் வைத்தால் அதனே அடைய முடியாது. ஏதேனும் ஒன்றையே திண்மையாக எண்ணிப் பற்றிக்கொள்ள வேண்டும். உலகத்தில் பற்றும் இறைவனிடத்தில் பற்றும் ஒன்றுக்கொன்று மாறுபாடானது. உலகத்தில் வாழ்வது வேறு, பற்று வைத்தல் வேறு. இறைவனிடத்தில் பற்று உடையவர்கள் எல்லாப் பொருள்களிடமும் உறவு. கொண்டாடலாம். ஆனல் உலகத்தில் பற்றுள்ளோர்கள் இறைவனோடு பற்றுக் கொண்டாடுவது இயலாது. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்து ஒரு நெறிப்பட்டு வாழ்பவனுக்கு அந்த உயிர்களுக்கு எல்லாம் தலைவனகிய ஆண்டவனிட்த்தில் சிறந்த பற்று இருக்கவேண்டும்: அப்போதுதான் உயிர்களிடத்திலுள்ள அன்பும் கிரந்தர மாக இருக்கமுடியும். ஆகையால், "பல காலமாக இருந்த பற்றை விட்டுவிட்டு இறைவனே அடையவேண்டுமென்ற காதலோடு புறப்பட்டாயே! நீ உன் பயணத்தை வெற்றி யுடன் முடிப்பாய்' என்று கூறுவதுபோல ஆசி கூறுகிருர் கக்ரேர். - -