பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் முதலில் திருப்பரங்குன்றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிருர். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிருன் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது. அந்த வழக்குக்கு அடிப்படை திருமுருகாற்றுப்படையே. பிற்காலத்தில் அருணகிரிநாத சுவாமிகளுடைய திருப்பாடல்களிலும், முருகனைப் பற்றிய துதி நூல்களிலும் ஆறுபடை வீடுகளைப் பற்றிய செய்திகள் நிரம்ப வருகின்றன. நக்கீரர் ஆறு படைவீடுகள் என்று குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் ஆறு இடங்களேத் தனியே வைத்துச் சுட்டிக்காட்டுவதால் ஆறுபடை வீடுகள் என்ற அமைப்பு உண்டாயிற்று. வேறு பல இடங்களிலும் முருகன் இருந்தாலும் ஆறு என்ற எண்ணிக்கைக்கும் அவனுக்கும் தொடர்பு மிகுதி. ஆகையால் ஆறு படைவீடு என்ற வழக்கு கிலேயாக கின்றுவிட்டது. அந்தப் படைவிடுகளில் முதலாவது திருப்பரங்குன்றம். - பரங்குன்றின் பழம் பெருமை திருட்பரங்குன்றத்தைப்பற்றிச் சொல்ல வருகிருர் நக்கீரர். அதைப் பற்றிய செய்தி சுருக்கமாகவே இருக் கிறது. மதுரையைப் பற்றிய வருணனையே முதலில் இருக் கிறது. ஏதேனும் ஓர் ஊரைப் பிறருக்குச் சுட்டிக்காட்ட வேண்டுமானல் அது சிற்றுாராக இருந்தால், அதன் அருகி லுள்ள பேரூரைச் சொல்லிப் பின்பு அதனைச் சொல்வது ஒரு வழக்கம். அவ்வாறு திருப்பரங்குன்றத்தை கேரே சொல்லாமல் அதன் அருகிலுள்ள மதுரை மாாகரைச்