பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 105 சொல்லி, அப்பால் திருப்பரங்குன்றத்தைச் சொல்கிருர் நக்கீரர். - மதுரை மாநகருக்கு மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம், அந்தக் காலத்தில் திருப்பரங்குன்றம் தனி ஊராக இல்லை. மதுரை மாநகரிலுள்ள மக்கள் பேரன்போடு திருப்பரங்குன்றத்திற்குச் சென்று வழிபட்டு வந்தார்கள். பரிபாடல் என்ற சங்க நூலில் அதைப்பற்றிய செய்திகள் வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் அந்தக் காலத்தில் இருந்த இயற்கை எழிலேயும், மதுரை மாநகரிலுள்ள மக்கள் திரளாகச் சென்று முருகனை வழிபட்ட செய்தியையும் அதில் காணலாம். குகைகளில் பல வகையான சித்திரங்கள் எழுதி இருக்கார்கள் என்பதை அந்த நூல் சொல்கிறது; அவ்விடத்தை எழுதெழிலம்பலம் என்று சொல்வார்கள். தொன்றுதொட்டே திருப்பரங்குன்றம் புகழுடையதாக கிலவுகிறது. முருகப்பெருமானுக்குரிய முதல் படைவீடு என்பதோடு. அது ஒரு சிவத்தலமு மாகும். பரங்குன்றம் என்ற பெயரே பரளுகிய சிவபெருமான் இருக்கின்ற குன்று என்ற பொருளுடையது; அந்தத் தலத்துக்குத் தேவாரம் உண்டு. ஆகவே சிவத்தலமும், முருகன் திருப்பதியும் ஒன்ருக இணைந்து அமைந்தது அவ்விடம். முருகப்பெரு மானின் புகழ் அங்கே மிகுதியாக இருப்பதனால் பலருக்கு அது பாடல் பெற்ற சிவத்தலம் என்பது தெரியாது. சிவத்தலம் என்பதை அதன் பெயரே நன்கு காட்டு கிறது. - - மதுரையின் சிறப்பு இனி நக்கீரர் சொல்கின்றதைப் பார்க்கலாம். அவர் முதலில் நமக்கு மதுரையை அறிமுகப்படுத்துகிருர். அவர்