பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 107” கொண்டு விளையாடுவதும் இயல்பு. வீரமுடையவர்கள் வெளியில் கின்று கோட்டையை முற்றுகையிடலாம். பெண் க3ளப் போன்றவர்கள் வீரம் இழந்து உள்ளே போகலாம். இதுதான் குறிப்பு. - மதிலே கெடுந்துTரத்திலிருந்து பார்க்கும்போது, பகை வர்கள் வேண்டுமானல் முற்றுகையிட்டுப் போர் செய்ய லாம் என்று உணர்த்துகின்ற பாண்டியனது கொடி அதன் மேல் உயர்ந்து விளங்குகிறது. செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி. (போரை விரும்பி உயர்த்திக்கட்டிய மிக உயரமாக உள்ள மீண்ட கொடிகளே உடைய.1 - மதிலேப் பார்த்து, அதன்மேல் உயர்ந்து பறந்து: கொண்டிருக்கும் கொடியைப் பார்த்து, பின்னர் வாயிலே அணுகுகிருேம். அங்கேதான் பந்தும் பாவையும் தொங்கு கின்றன. அந்த வாயில் இப்போது மங்கல வாயிலாக இருக்கிறது. திறந்து இருக்கின்ற வாயில் அது. பகைவர்க ளாகிய வீரர்களே அடியோடு அழித்துவிட்ட சிறப்பை உடையவன் பாண்டியன். ஆதலின் அந்த வாயிலில் இப் போது போருக்குரிய அறிகுறிகள் இல்லை. வரிப்பு:ன பங்தொடு பாவை துரங்கப் பொருகர்த் தேய்த்த போர்.அரு வாயில். [வரிந்து புனேயப்பட்ட பந்தோடு பொம்மைகள் தொங்க, பகை வீரர்களே அழித்துப் போர் அருமையாகப்" போன வாயிலையும்-உடைய மதுரை என்று சொல்ல வருகிரு.ர்.)