பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 108 திருமுருகாற்றுப்படை விளக்கம் கடைவீதி அந்த வாசலின் வழியே மதுரைக்குள்ளே புகுகிருேம். எங்கே பார்த்தாலும் விசாலமான தெருக்கள்; அழகான அங்காடிகள் இருக்கின்றன. பழங்காலத்தில் மதுரையிலும் காவிரிப்பூம் பட்டினத்திலும் இருந்த அங்காடிகள் மிக்க சிறப்பைப் பெற்றவை; பிற நாட்டிலிருந்து வந்தவர்களும் பண்டங்களேப் பெற்றுத் தம் ஊருக்குச் செல்லும் பெரு மையை உடையவை. மதுரையில் அந்தக் காலத்தில் பகல் நேரத்தில் வியாபாரத்தைச் செய்யும் இடத்தை காள் அங்காடி என்றும், மாலேயில் வியாபாரிகள் வாணிகம் செய்யும் இடத்தை அல்லங்காடி என்றும் கூறுவார்கள். அந்த இரண்டு கடைத் தெருவுகளும் மிக விரிவாக அமைந்திருந்தன என்று பழைய நூல்கள் கூறுகின்றன. அந்த அங்காடிகளில் வஞ்சகம் என்பதே கிடையாது. உள்ளதை உள்ளபடியே சொல்வி வியாபாரிகள் வியா பாரத்தை கட்த்துவார்கள்; கொள் முதல் இது, லாபம் இது என்று வெளிப்படையாகச் சொல்லி விற்பனை செய் வார்கள்: போலிச்சரக்கு வியாபாரமோ, அநியாய விலையைச் சொல்கின்ற முறையோ, ஏமாற்ருே, திருட்டோ அங்கே இருப்பது இல்லை. அது எந்த வகையான தீமையும் இல்லாத அங்காடி, அதனே நக்கீரர், தீது தீர் கியமம் என்று சொல்கிருர், அந்தத் தெருக்களில் எப்போதும் திருமகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கிருள்; உலகத்திலேயுள்ள பல கர்ட்டு மக்களும் வந்து சேர்ந்து பண்டங்களைக் கொடுத்தும் கொண்டும் வாணிகம் செய்யும் இடம் அது: மக்கள் கூட்டமும் பொருளின் சிறப்பும் சிறிதும் குறை