பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 109. யாமல் நிற்கின்ற இடம், அங்கே திருமகள் கொலு வீற்றிருக்க கிருள் என்றே சொல்லவேண்டும். ஆகவே, திருவிற்றிருந்த தீது தீர் கியமத்து (திருமகள் சிறப்புடன் எழுந்தருளியிருக்கும், தீமை தீர்ந்த கடைகளையும்,) என்று சொல்கிருர். தமிழ்காட்டில் அந்தக் காலத்தில் மற்ற நகரங்களேவிடச் சிறந்த மாட மாளிகைகள் மதுரையில் அதிகமாக இருந்தன. அதல்ை அதை "மாடக் கூடல்' என்று சொல்வார்கள். 'கான்மாடக் கூடல்' என்பது மதுரைக்குரிய ஒரு பெயர். ஒரு காலத்தில் இறைவன் தன்னுடைய தலையில் இருந்த நான்கு மேகங்களையே மாடமாக கிறுத்தி, வருணன் இடை யருது பெய்த. மழையிலிருந்து அவ்வூரைக் காப்பாற்றினன் என்பது புராண வரலாறு. பொதுவாகவே செல்வம் கிரம்பிய ககரமாதலின் செல்வர்கள் பெரிய மாடங்களை எழுப்பியிருந்தார்கள். அதல்ை மாடக்கூடல் என்ற பெயர் வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பல பல மாடங்கள் இருந்தன. மாடம் மலி மறுகிற் கூடல். (மாடங்கள் மலிந்த தெருக்களையும் உடைய மதுரை வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோட்டையும் கொடிகளும். சமாதானத்தை வெளிப்படுத்தும் மதில் வாயிலும், செல்வச் சிறப்பையும் நியாயமான வாணிகச் சிறப்பையும் புலப்படுத்தும் அங்காடிகளும், வளத்தைக் காட்டும் மாடங்களும் உடைய மதுரைமா ககருக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருக்கிறது என்று சொல்ல வருகிரு.ர். . c மாடம் மலி மறுகிற் கூடற் குடவயின். (மாடங்கள் மலிந்த தெருக்களேயும் உடைய மதுரைக்கு. மேற்கே.) - . -