பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘1@ திருமுருகாற்றுப்படை விளக்கம் வண்டுகளின் மகிழ்ச்சி இனி, திருப்பரங்குன்றத்தைப் பற்றிச் சொல்கிருர், திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் வயல்கள் இருக் கின்றன. மலேயின்மேலே சுனேகள் இருக்கின்றன. வளப்ப முடைய கிலமாதலின் அங்கங்கே உழுது பயிரிட்டிருக் கிருர்கள். வளம் கிரம்பிய வயல்கள் அங்கே உண்டு, வயல் வளம் சேற்றினால் அமைவது. நல்ல பூமி ஆதலால் அந்தச் சேறு கறுப்பாக இருக்கிறது. துண்டு துண்டாக அங்கங்கே சிதறுண்டு கிடக்கும் வயலாக இல்லே. எங்கே பார்த்தாலும் அகன்ற கிலப் பரப்புகள் எல்லாம் கரிய சேற்றையுடைய வயலாகக் காட்சி தருகின்றன. இருஞ்சேற்று அகல் வயல் என்று நக்கீரர் பாடுகிருர், வயலின் ஓரங்களில் தண்ணிர் தேங்கும் இடங்களில் தாமரை மலர்கள் மலர்ந்திருக் கின்றன. முள்ளைத் தண்டிலேயுடைய தாமரை வாய் அவிழ்ந்து விரிந்திருக்கிறது. மலர் இருக்கும் இடத்தில் வண்டு வரவேற்பு இல்லாமல் போய்ச் சேரும். முதல் நாள் இரவிலே வண்டுகள் வந்து ஒரு தாமரை மலரில் புகுந்தன. அது மூடிக்கொண்டது. இரவு முழுவதும் அந்தத் தாமரை மலரையே படுக்கையாகக் கொண்டு அந்த வண்டுகள் அங்கே தாங்கின. ஆண் வண்டும் பெண் வண்டு மாகத்தான் இருக்க வேண்டும். காலையில் வாயில் கதவைத் திறப்பதுபோல அந்தத் தாமரை இதழ்கள் விரிந்தன. அப்போது அங்கு இருந்த வண்டுகள் புறப்பட்டன. முதல் நாள் மாலையில் தாமரைத் தேனே உண்ட வண்டுகள் இன்று காலேயில் நெய்தல் மலரை .ஊதுகின்றன. வைகறை நேரமாகையால் அது இன்னும்