பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் 111 மூடிக்கொள்ளவில்லை. அந்த நெய்தலில் உள்ள கள்ளையும் குடித்து மறுபடியும் பூரிக்கின்றன. காலேயில் ጬ சுறுப்பை ஊட்டும் வகையில் இருக்கிறது கெய்தல் தேன்; அதனால் அதைக் கள் என்றே சொல்கிருர். இப்போது சூரியன் கன்ருகத் தன்னுடைய கிரணங் களைப் பரப்பிவிட்டான். களிப்பில் மிதந்த அந்த வண்டுகள் மெல்ல மெல்லப் பறந்து மேலே செல்கின்றன. மலேயின் மேலுள்ள சுனைகளில் பலவகையான மலர்கள் மலர்ந்திருக்கின்றன. கண்களைப் போன்ற சின்னஞ் சிறிய பூக்கள் அங்கே உள்ளன. அவற்றிலும் தேன் இருக்கின்றது. முதல் நாள் தாமரைத் தேனே நுகர்ந்து விட்டு, விடியற்காலேயில் நெய்தல் கள்ளே உண்டு புறப்பட்ட வண்டுகள், நல்ல சிறிய பூக்கள் மலர்கின்ற மலையின் மேலுள்ள சுனைக்கு வந்து விட்டன. அங்குள்ள மலர் களில் புகுந்து அங்கேயுள்ள தேனையும் உண்டு ரீங்காரம் செய்கின்றன. இப்படி வேறு வேறு வண்டுகள் ஒலிக் கின்றன. அழகிய சிறகுகளே உடைய வண்டுக் கூட்டங்கள் சேர்ந்தாற்போல் முரலும்போது ஒருவகை இனிமையான ஒலி எழும்புகிறது. வயிறு சிரம்பத் தேனே உண்ட சிறப் பினலே அந்த வண்டுகள் இடைவிடாமல் மலேயின் மேலே யுள்ள சுனைகளில் ரீங்காரம் செய்கின்றன. அத்தகையது பரங்குன்றம். - இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்.