பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருமுருகாற் றுப்படை விளக்கம் (கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து, மலர்ந்த முள்ளேத் தண்டிலே உடைய தாமரையில் உறங்கி, விடியற்காலையில் கள் மணம் வீசுகின்ற கெய்தல் மலரை ஊதி, பகல் கேரம் வந்தவுடன். கண்ணேப் போல மலர்ந்த அழகிய சுனே களிலுள்ள மலர்களில், உள்ளே சிறகுகளை யுடைய வண்டுகளின் கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்: குன்றத்தில் எழுந்தருளியிருப்பதற்கும் உரியவன்.) * இரவிலே தங்கிய வண்டுகள் தாமரையில் தூங்கு. கின்றன என்று சொல்ல வந்தவர், - முள்தாள் தாமரைத் துஞ்சி என்ருர், இங்கே முள்ளேயுடைய தாமரை என்று சொல் வதற்கு ஏதேனும் சிறப்பு உண்டா என்று பார்க்க வேண்டும். இரவில் தூங்குபவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் அல்லவா? ஆகையால் இயற்கையிலேயே வண்டுகள் துஞ்சுகிற படுக்கையாகிய மலருக்கு முள் பாதுகாப்பாக இருக்கிறது. வேறு எந்தப் பிராணியும் அந்தத் தண்டின் மேல் ஏறித் தாமரையில் புகமுடியாது. தாமரையாகிய வீட்டின் இதழாகிய கதவு தானே காலேயில் திறந்து கொள்ளுமேயன்றி வேறு ஒருவராலும் திறக்க. முடியாது. s வண்டுகளுக்கே இத்தனே இன்பமான வாழ்வு அமையும் போது மற்றவர்களுக்கு எவ்வளவு இன்பம் உண்டாகும். என்று நாம் வியக்கிருேம். வீரமும், செல்வமும், சமாதானமும் ஒருங்கேயுடைய மதுரை மாககருக்கு அருகில் இயற்கையான எழில் கலங்கள் கிறைந்த திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிருன். அடியார்களுக்கு அருள் செய்வதற்காக வந்து அமர்ந்த இடம் ஆகையால் மிக்க விருப்போடு அங்கே தங்கியிருக்கிருன்.