பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவாய் முருகன் திருச்சீரலைவாய் என்பது திருச்செக்தாருக்குப் பெயர். அது மிகப்பழைய தலம். அலேவாய், செந்தில் என்ற இரண்டு திரு நாமங்களும் சங்ககாலத்து நூல்களில் வருகின்றன. எப்போதும் அகல மோதுகின்ற இடத்தில் திருக்கோயில் அமைந்திருப்பதால் அலேவாய் என்ற பெயர் வந்தது. அது அடைமொழியுடன் திருச்சீரலவாய் என்று வழங்குகிறது. செந்தி என்னும் பழம் பெயர் பிறகு செங்திலாகி, செந்தூர் ஆயிற்று. முருகப் பெருமான் சூரபன்மனேடு போராடி வெற்றி பெற்று ஜயாபிஷேகம் செய்துகொண்ட இட மாதலின் அதற்கு ஜயந்தி என்ற பெயர் வந்தது; அதுவே நாளடைவில் செக்தி ஆயிற்ற, அது மருவிச் செந்தில், செந்தூர் என்று வழங்கியது என்பர். திருச்செர்தார் ஆண்ட வனுடைய பெருமையை அளவிட்டுச் சொல்ல முடியாது. வென்றிமாலேக் கவிராயர் என்ற புலவர் பெருமான் அதற்கு ஒரு புராணம் பாடியிருக்கிருர் பகழிக்கூத்தர் என்ற வைணவர் அங்கே சென்று தம் வயிற்று வலி திரப் பெற்று ஒரு பிள்ளைத்தமிழ் பாடினர். குமர குருபரர் ஐந்து வயசுவரை ஊமையாக இருந்தார். அவருடைய தாய் தங்தையர் அவரைத் திருச்செந்தூர் ஆண்டவனுடைய சங்கிதானத்தில் கொண்டுபோய்க் கிடத் தி விரதம் இருக் தனர். அப்பெருமான் திருவருளால் அவர் ஊமைத்தன்மை நீங்கினர். நீங்கினவுடன் கந்தர் கலிவெண்பாவைப் பாடும் அருளாற்றல் அவருக்குக் கிடைத்தது. ரீ சங்கராசார்ய சுவாமிகள் வயிற்று வலியால் துன்புற்று இந்தத் தலத்திற்கு