பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவாய் முருகன் 115 வந்து புஜங்க ஸ்தோத்திரம் பாடி அந்த கோயினின்றும் iங்கினர். - பழைய சங்க நூல்களில் பல இடங்களில் திருச் சிரலைவாயைப் பற்றிய செய்திகள் வருகின்றன. பழம் பாடல்களில் 'திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎய்' என்று அகநானூற்றில் வருகிறது. 'வெண்டலப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை' என்பது புறகானுாற்றுப் பாட்டு. 'வரைவயிறு கிழித்த நிழல் திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' என்பது ஒரு பழம்பாட்டு, சிலப்பதிகாரத்தில் இளங்கோ வடிகள் "சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்று பாராட்டுகிருர் தேவாரத்தில் அப்பர் சுவாமிகள், ‘நம்செந்தில் மேய வள்ளி மணுளற்குத் தாதை கண்டாய்” . என்று குறிப்பிடுகிருர். திருச்செந்தூரில் மூல மூர்த்தி ஒரு முகமுடைய திருக்கோலத்துடன் எழுங்தருளியிருக்கிருன். உறசவ மூர்த்திதான் ஆறு திருமுகமுடையவன். அந்தப் பெருமா ஆணுடைய சங்கிதியை ஷண்முக விலாசம் என்று வழங்கு