பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருமுருகா ற்றுப்படை விளக்கம் கிருர்கள். வெளியில் பெரிய திருவிழாவில் எழுந்தருளும் மூர்த்தியாகிய அக்தப் பெருமானே எண்ணியே கக்கீரர். திருச்சீர் அலைவாய்ப் பகுதியில் ஆறுமுகத்தைப் பற்றியும், பன்னிரண்டு திருக்கரங்களைப் பற்றியும் பாடுகிருர் என்று. தோன்றுகிறது. இனி அவர் காட்டும் பெருமானப் பார்க்க Gł}fTL/), யானை வாகனம் முருகப்பெருமான் யானேயின்மேல் எழுந்தருளி வருகிருன். முருகனுடைய வாகனங்களில் சிறந்தது மயில், அடுத்தபடி நிற்பது வேழம். அதற்குப் பிணிமுகம் என்று பெயர். திருத்தணி முதலிய தொண்டை காட்டுத் தலங். களில் யானே உருவத்தை முருகனுடைய சங்கிதானத்திற்கு எதிரில் வைத்திருப்பதைக் காணலாம். அவன் எல்லா உலகத்திற்கும் அதிபதி. அரச கிலேயில் உள்ளவன். ஆதலின் அவனுக்கு யானையும் வாகன மாயிற்று. நக்கீரர் முதலில் அந்த யானையை வருணிக்கிரு.ர். - - முருகன் ஏறுகிற யானையானுலும் அதற்கு எப்போ தாவது அகங்காரம் வரும்; அப்போது முருகன் அதைத் தண்டிப்பதும் உண்டு. அங்குசத்தை ஒச்சி அதன் போக்கைச் சீர்திருத்துவான். 'கம்முடைய யானே யாயிற்றே! தேவ. லோகத்து யானேயாயிற்றே" என்று சிறிதும் எண்ணுமல், தவறு நிகழ்ந்தபோதெல்லாம் கண்டிக்கும் தன்மையாளன் எம்பெருமான், தம்மைச் சார்ந்தவர்கள் தவறு செய்தால் அதனை மன்னிப்பது முறையாகாது. யானேயினுடைய நுதலில் வடுக்கள் இருக்கின்றன. கூர்மையான அங்குசத் தின் நுனி பதிந்த வடுக்கள் அவை. அந்த நுதலில் பொன்ன லான மாலையும். கெற்றிப்படாமும் அசைகின்றன. முருகன்