பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவாய் முருகன் . 117 ஏறி வரும் யானையாதலின் அதனை கன்ருக அலங்காரம் செய்திருக்கிருர்கள். அந்த யானையை கிமிர்ந்து பார்த்தால் அதன் வெற்றியிலுள்ள மாலேயும் முக படாமும் பளிச் சென்று விளங்குகின்றன. அவை அசைய மெல்ல அசைக்து வருகிறது யானே. வைக்நுதி பொருத வடுஆழ் வளிநுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வர. (கூர்மையான அங்குசத்தின் நுனி மோத, அதனல் உண்டான வடு ஆழ்ந்திருக்கும் வரிகளேயுடைய நெற்றியில், வாடாத பொன்னரி மாலை பட்டத்தோடு அசைய.) "யானே வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்று ஒரு பழமொழி வழங்குகிறது. யானே வருவதைக் குறிப்பதற்கும் வழியில் உள்ளவர்கள் யானைக்கு வழி விடுவதற்கும் அதற்கு மணி கட்டுவது இயல்பு. ஒரு கயிற்றில் இரண்டு தலைப்பிலும் மணியைக் கட்டி அதன் மேல் போட்டிருப்பார்கள். யானை காலே எடுத்து வைத்து கடக்கும்போது அந்த மணிகள் மாறி மாறி ஒலிக்கும். தேவ லோகத்து யானையானலும் அதற்கும் இரண்டு பக்கத்திலும் மணியைக் கட்டியிருக்கிருர்கள். அது கணிர் கணிர் என்று ஒலிக்கிறது. வலக் காலத் தூக்கி வைக்கும்போது அந்தப் பக்கதது மணியும், இடக் காலத் தாக்கி வைக்கும்போது அந்தப் பக்கத்து மணியும் மாறி மாறி ஒலிக்கின்றன. அப்படி மணிகள் ஒலிக்க அது வேகமாக நடந்து வருகிறது. படுமணி இரட்டும் மருங்கின் கடுகடை. (ஒலிக்கும் மணி மாறி மாறி ஓசை செய்யும் பக்கத் தையும் வேகமான நடையையும்.) அந்த வேழம் முருகப் பெருமான் ஏறுகின்ற பெரு மையை உடையது. பெரு வீரத்தையுடையது. அதன்