பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருமுருகாற்றுப்படை விளக்கம் வலிமைக்கு உவமையே கிடையாது. எமனே வேண்டுமானல் சொல்லலாம். அந்த யானையை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினல் யாராலும் வெல்ல முடியாது. - கற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின், (எமனைப் போன்ற மாற்ற ಆlurத வலிமையையும்.) எமன் மாற்ற முடியாத மொய்ம்பை உடையவன். "மாற்றரும் கூற்றம்” என்று தொல்காப்பியம் கூறும். எத்தகைய வலிமை உடையவகை ஒருவன் இருந்தாலும் கூற்றுவனே ஒரு கணம் தாமதிக்கும்படி செய்யமுடியாது. பணத்தினலோ பதவியினலோ பிறவகை வலிமையினலோ குறிப்பிட்ட ஓர் உயிரைக் கொண்டு போக வரும் கூற்று வனே மாற்ற முடியாது. அதே போலத்தான் அந்த யானேயும் போரில் புகுந்ததால்ை அதனுடைய எதிர்ப்பை மாற்றுவதற்கு யாராலும் முடியாது. அதன் வேகத்தைப் பாத்தால் கூற்றம் யானே உருவம் கொண்டு வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இருகப் பெருமானுக்குரிய அடியவர்கள் வேண்டும் போதெல்லாம் அவன் அங்கே போய் கிற்பான். பக்தர்க ளுடைய அன்பின் வேகத்தைக் காட்டிலும் முருகப் பெரு மானுடைய கருணைக்கு வேகம் அதிகம். அவர்கள் ஒரு. கால் முருகா என்று சொல்வதற்குள் மிக்க வேகமாக ஒடிச் சென்று அவர்களுடைய துன்பத்தைப் போக்கும் பெருங் கருணையாளன் அவன். அதற்கேற்றபடி அவனுக்கு. வாகனம் அமையவேண்டுமல்லவா? "குதிரைக்கு மேற்கே பயணம், ராவுத்தனுக்குக் கிழக்கே பயணம்' என்று ஒரு பழமொழி உண்டு. அப்படியின்றிக் தன்மேல் ஏறி கடத்துபவனது உள்ளத்தை அறிந்து, -