பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவாய் முருகன் - 119. செல்வது எதுவோ அதுதான் நல்ல வாகனம். முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் பிணிமுகம் அவன் கருத்தை அறிந்துகொண்டு வேகமாகச் செல்கிறது. சண்டப் பிரசண்ட மாகக் காற்று அடிப்பது போலப் போகும் ஆற்றல் உடையது அது. கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் கால்கிளர்ந்து அன்ன வேழமேல் கொண்டு [யமனப் போன்ற தடுப்பதற்கரிய வலிமையை உடைய, காற்று எழுந்தாம் போன்ற வேகத்தையுடைய யானேயின்மேல் ஏறிக்கொண்டு, மாற்று அரு-மாற்று வதற்கு அரிய மாறறு: தொழிற் பெயர்.) திருமுடி யானேயின்மேல் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே இனி காம் பார்க்கலாம். நக்கீரர் மெல்ல அவனுடைய திருமேனியைச் சுட்டிக் காட்டி, ஒவ்வொரு திருமுகமாகக் காட்டிப் பின்பு திருக்கரங்களேயும் காட்ட வருகிரு.ர். இதோ முருகப்பெருமானுடைய மகுடம். பலவகை மணிகளால் அமைந்தது அந்தக் கிரிடம், ஒன்ருேடு ஒன்று மாறுபட்ட நிறமுள்ள மணிகளாகையால் எடுப்பாகத் தெரிகின்றன. முருகனுடைய திருமுடியில் அந்த மகுடம் பளபளக்கிறது. முடியில் ஐந்து வெவ்வேறு பகுதிகள் உண்டு. அடிமுதல். நுனி வரையில் ஐந்து வகையான பகுதிகள் கன்ரு க இழைத்துச் செய்யப் பெற்ற முடி அது. பல வகையான பூ வேலைகளும் சிற்ப வேலேகளும் அமைந்த அந்த முடியில் வெவ்வேறு விறம் பெற்ற மணிகளைப் பதித்திருக்கிருர்கள். முருகன் எப்படித் திரும்பிலுைம் அந்த முடியிலுள்ள மணிகள் பளபளவென்று ஒளி வீசுகின்றன.