பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 120 திகுமுருகாற்றுப்படை விளக்கம் ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, [ஐந்து வேறு வேறு உருவத்தில் கைத்தொழில் துட்பம் கிரம்பிய முடியில் விளங்கிய வெவ்வேறு கிறம் பெற்ற மணிகள் மின்னலே ஒத்த ஒளியோடு திருமுடியில் பொலிவு பெற்று விளங்க.) குழைகள் திருமுடிக்குக் கீழே முகங்கள் விளங்குகின்றன. ஒவ் வொரு முகமும் நம்முடைய உள்ளத்தைக் கொள்கள கொள்ளும் சுடரோடு விளங்குகிறது. முகத்தின் இருபக்கங் களிலும் இரண்டு குழைகள் மின்னுகின்றன. வெவ்வேறு வகையான அழகுடன் அவை விளங்குகின்றன. தாழ் குழையாதலால் காதிலிருந்து தொங்குகின்றன. திருமுகம் சந்திரன் போல இருக்க, அதற்கு அருகில் மிக்க ஒளி படைத்த இரண்டு கட்சத்திரங்கள் சுடர்விடுவது போல அந்தக் குழைகள் ஒளியை வீசுகின்றன. ககைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவை.இ அகலா மீனின் அவிர்வன இமைப்ப. (ஒளி தங்கி அசைகின்ற பலவகை மணிகளையுடைய பொன்னலான குழைகள், வானத்தில் விளங்கும் இயற்கை யையுடைய ஒளியைப் பெற்ற திங்களேச் சேர்ந்து அகலாத நட்சத்திரங்களைப் போல விட்டு விளங்கி ஒளிர.) சந்திரனே உடுபதி என்று சொல்வார்கள். அவன் கட்சத்திரங்களுக்கெல்லாம் தலவன். அவனிடத்தில் அன்பு பூண்டு இரண்டு நட்சத்திரங்கள் நெருங்கி ஒளி வீசுவன. போலத் தோன்றுகிறது இந்தக் காட்சி.