பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருமுருகாற்றுப்படை விளக்கம் இயலச் சொன்னர், இனி, தனித் தனியே ஒவ்வொரு, முகத்தின் சிறப்பையும் எடுத்து விளக்கப் போகிருர், ஒளி தரும் முகம் உலகம் இயற்கையாகவே இருளே உரிமையாக உடை யது: அறியாமையையும் கிலேயாமையையும் பெருமை யாக உடையது. கதிரவன் முதலிய சுடர்கள் ஒளி வீசா விட்டால் உலகம் இருள் மயமாக கிற்கும். பகல் கேரத்தில் கூட, சூரிய கிரகணம் முழுமையாக இருந்தால் இவ். வுலகம் முழுவதும் இருள் கப்பிக் கொள்வதைப் பார்க் கிருேம். - இவ்வாறு இருளையே உரிமையாகப் பெற்ற உலகத்தை, 'இருள் தருமா ஞாலம்" என்றும், "மாயிருள் ஞாலம்" என்றும் புலவர்கள் சொல்வார்கள். உலகம் புறவிருளை உடையது; உலகத்திலுள்ளார் அக இருளாகிய அறியா மையை உடையவர்கள். இருள் சூழ்ந்த உலகத்தில் உயிர்கள் உடம்பெடுத்து வாழ்கின்றன. ஒளியின்றி உயிர்களால் வாழ்க்கை நடத்த இயலாது. ஒளியைத் தரும் பொருள்களைச் சுடர்கள் என்று சொல்வார்கள். சூரிய சந்திர அக்கினிகளே முச்சுடர் என்பார்கள். சூரியன் பகலிலும் சந்திரன் இரவிலும் அக்கினி எல்லாக் காலங்களிலும் இருளேப் போக்கி ஒளி தருகின்றன. இந்த மூன்று சுடர்களும் இட. எல்லேயும் கால எல்லையும் உடையன. சூரியன் கால எல்லையையும் இட எல்லேயையும் உடையவன் என்பதை முன்பே பார்த்தோம்; கதிரவனே இப்படி எல்லேக்கு அகப்பட்டவன் என்ருல் சந்திரனையும். அக்கினியையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.