பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் - 123% அக்கினி கமக்கு விளக்காக நின்று வெளிச்சம் தருகிறது. காம் ஏற்றில்ை விளக்கு எரிகிறது. அகல் முதலிய பாத்திரங்களும் திரியும் எண்ணெயும் இருந்தால் விளக்கு எரிகிறது. அகலே இடமாகவும் திரியையும் எண்ணெயையும் உணவாகவும் கொண்டு அக்கினியே விளக்காக எரிகிறது. பற்றுக்கோடு இல்லாத அக்கினியைக் கண்ணுல் காண முடியாது. அது விளக்காகவோ கொழுக் தாகவோ எரியும்போதுதான் புலகிைறது. விளக்காகத் தோன்றும் சுடரைவிடப் பெரியது சந்திரன். சந்திரன் சூரியனிடத்திலிருந்து ஒளியைப் பெறுகிருன். அவனே விடப் பெரிய சுடர் சூரியன். அந்தச் சூரியனுக்கும் ஒளியைத் தருகிறவன் இறைவன். அவன் சோதி மயமானவன். அந்தச் சோதியே இந்தச் சுடர்களேயும் விளக்குகளையும் ஒளிபெறச் செய்கிறது. அதனல், இந்த மூன்றையுமே இறைவகை வைத்துப் போற்றுவார்கள். 'சோதியே சுடரே சூழொளி விளக்கே’’. என்று மாணிக்கவாசகர் பாடுகிருர் , இறைவன் காலம் இடம் என்னும் எல்லே கடந்த சோதியாக கின்று உலகத்தில் சுடர்களும் விளக்குகளும். ஒளிபெறச் செய்கிருன். முருகனேக் கந்தபுராணம், 'பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு’’ என்று கூறும். சோதிமயனகிய முருகன் ஒரு திருமேனியுடைய வகிைக் கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டு எழுந்தருளினன். அவனுடைய முகங்கள் ஆறினுள் ஒன்று உலகில் இயற்கையாக அமைந்த இருளேப் போக்கி ஒளி தருகின்றது. அதாவது அருக்கனில் சோதி வைத்து, திங்களில் கிலவை வைத்து,