பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*124 திருமுருகாற்றுப்படை விளக்கம் அக்கினியில் ஒளியை வைத்து எங்கும் கதிர்களைப் பரப்பு கிறது. ஆறு திருமுகங்களைப் போற்றப் புகுந்த நக்கீரர் முதலில் உலகில் இருளைப் போக்கும் திருமுகத்தைப் பற்றிச் சொல்கிருர். பெரிய இருள் படர்ந்த உலகம் இருளின்றிக் குற்றம் இன்றி விளங்கும் படியாகப் பல வகையான கதிர்களே விரிக்கின்றதாம், ஒரு முகம். மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம். (பெரிய இருளேயுடைய உலகம் குற்றம் இன்றி விளங்கும்படியாகப் பல வகையான கதிர்கள் விரிந்தது ஒரு முகம்.) முருகனுடைய திருமுகத்தின் சில கதிர்கள் சென்று சூரியனில் இணைந்து அதைச் சுடரச் செய்கின்றன. அப்படியே திங்களிலும் சில கதிர்கள் புகுந்து நிலவு பொழியச் செய்கின்றன. பல வகையாக உள்ள விளக்கு களிலும் படிந்து அவற்றை ஒளியுடையனவாகச் செய் கின்றன. உபநிடதங்கள் இறைவனுல் உலகம் ஒளி பெறுகின்றது என்று பேசும். "இருளினின்றும் ஒளிக்கு என்னே அழைத்துச் செல்க' என்பது ஓர் உபகிடதம். இந்தச் செயலைச் செய்கின்றது முருகப்பெருமானுடைய திருமுகங் .களில் ஒன்று. முருகனுடைய திருமுகங்களே வருணிக்க வந்த நக்கீரர் முதலில் சுடர்களுக்கெல்லாம் ஒளி வழங்கி உலகில் இருளைப் போக்கும் திருமுகத்தைச் சொன்னர். "பிரமமாய் கின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி வந்தமையால் அந்த வடிவில் முதல் முகம் ஒளிவீசி இருளைப் போக்குகிறது,