பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் 125s, ஆர்வலர்க்கு அருளும் முகம் இனி, இரண்டாவது முகத்தைப்பற்றிச் சொல்ல வருகிருர். முதல் முகம் உலகத்துக்கே பொதுவான கலத்தைச் செய்கிறது. இரண்டாவது முகமோ சிறப்பான ஒரு செயலைச் செய்கிறது. அன்பர்களுக்கு. அநுக்கிரகம் செய்கிறதாம். பக்தர்களுக்கு ஆர்வலர் என்பது ஒரு பெயர். சங்ககால நூல்கள் அவ்வாறு. ծա- նյւԸ. 'ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்' 'ஆர்வலர் தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் நீயே' என்று பரிபாடலில் வருகிறது. இறைவன் திருவருளேப் பெறவேண்டும் என்ற ஆர்வம் மீதுார்ந்த வர்கள் ஆர்வலர்; அவர்களே பக்தர்கள். அவர்கள் முருகனைப் போற்றிப் புகழ்கிருர்கள். இறைவனே அன்றி. வேறு யாரையும் புகழாதவர்கள் அவர்கள். தமக்கு எல்லா கலங்களையும் வழங்கும் வள்ளல் என்ற உறுதியான கம்பிக்கையோடு அவனே வாயார வாழ்த்தி ஏத்து வார்கள். தமக்கு எது வேண்டுமானலும் இறைவனிடத் தில் விண்ணப்பம் செய்துகொள்ளும் இயல்புடைய வர்கள் அவர்கள். இளங்குழந்தை தாயிடம் எல்லா வற்றையும் கேட்டுப் பெறுவது வழக்கம். பக்தர்களும் தம் குறைகளே இறைவனிடமே சொல்லிக் கொள்வார்கள். உண்மையான கம்பிக்கை உடையவர்களுக்கு இறைவன் அவர்கள் வேண்டியவற்றைக் கொடுத்தருள்வான். அவர்கள் தன்னைப் புகழப் புகழ அதைக் கேட்டு உளம் மகிழ்ந்து அவர்கள் கேட்டன எல்லாம் தரும் பெருமான் அவன,