பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#126 திருமுருகாற்றுப்படை விளக்கம் 'பரந்துபல் ஆய்மலர் இட்டு முட்டாதடி யேயிறைஞ்சி இரந்தஎல் லாம்எமக் கேபெற லாம்என்னும் அன்பர் உள்ளம் கரந்துநில் லாக்கள்வனே’’ என்று மாணிக்கவாசகர் பாடுகிருர், மற்றவர்களுக் கெல்லாம் மறைந்து சின்ருலும், தன்னே வணங்கி எது கேட்டாலும் தருவான் என்ற உறுதியையுடைய அன்பர் களிடம் மறைந்து கிற்க மாட்டானம். அவன் அவர் களுக்கு அளிக்காமல் கரக்கவும் மாட்டான். ‘'வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெருதுதவு பெருமாளே” என்று திருப்புகழில் அருணகிரியார் பாடுகிருர், அடியார் களுக்கு வேண்டியதை வேண்டியபோதெல்லாம் கொடுக் கும் பரம கருணநிதி முருகன். . ஆர்வலராகிய பக்தர்கள் தன்னைத் துதிக்கத் துதிக்க அவர்களுடைய கிலேக்கு ஏற்றபடி வந்து அருள் செய்வான் முருகன். சிறந்த வள்ளல்கள் ஏழைகள் உள்ள இடத்துக்குத் தாமே சென்று கொடுப்பார்கள். வண்டி போகாத இடமால்ை அந்த இடத்துக்கு ஏற்றபடி காலால் நடந்து சென்று அறம் செய்வார்கள். தாமே சோற்றைப் பரிமாறுவார்கள். இறைவனும் அவர்களைப் போலத் தன்னுடைய பக்தர்களுக்கு எவ்வாறு சென்று அருள் செய்தால் நலம் உண்டாகுமோ அவ்வாறு சென்று வரம் கொடுப்பான். அவர்கள் எவ்வாறு வேண்டிக்கொள்கிருர்களோ அப்படி யெல்லாம் நடப்பான். அடியார்களுக்கு ஏவலாளனுகவும் கடக்கும் இயல் :புடையவன,