பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் 127 'அவரவர் ஏவ லாளனும் நீயே’ என்று பரிபாடல் பாடுகிறது. எப்படியாவது பக்தர் கள் மனம் மகிழவேண்டுமென்பது இறைவனுடைய 46T@8ðT @RýTt f. ஒடி ஆடி விளேயாடிக்கொண்டிருக்கும் குழந்தைக்குச் சோறு ஊட்டப்புகும் தாய் தானும் அந்தக் குழந்தைக்குச் சரியாக ஒடி இனிய வார்த்தைகளைக் கூறி ஊட்டுகிருள். இறைவனும் பக்தர்களுக்கு இனிமையான முறையில் ஒழுகி வரம் கொடுப்பான். அமர்ந்து இனிது ஒழுகி ஆசையோடு வரம் கொடுப்பானும். அப்படிக் கொடுப் பதில் அவனுக்குப் பெரு விருப்பம்; காதல். அவனிடம் வரம் பெறவேண்டும் என்ற காதல் பக்தர்களுக்கு இருக்கும். அதுபோலவே அவர்களுக்கு வரம் கொடுக்க வேண்டும் என்ற காதல் முருகனுக்கும் இருக்கும். கொடுப்பதல்ை வரும் இன்பத்தை அறிந்தவர்கள் இரவலரை எதிர்பார்த்து நிற்பார்கள், அதனே அறியாத வர்களே தம் பொருளேப் பிறருக்குக் கொடுக்க அஞ்சுவார்கள். . . 'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்திழக்கும் வன்கண வர்’ . என்று கூறுவார் திருவள்ளுவர். இறைவன் இந்த இன்பத்தை உணர்ந்தவன். ஆதலின் பக்தர்களுக்கு வரம் கொடுக்கவேண்டு மென்ற பெரு விருப்போடு இருக்கிருன். . இவ்வாறு, பக்தர்கள் புகழ அவர்களுடைய மனம் பொருந்தும்படியாக இனிமையாக கடந்துகொண்டு, பிக்க விருப்பதுடன் அவர்களுக்கு வரம் அளிக்கும். செயலைச் செய்கிறது. முருகனுடைய இரண்டாவது முகம். .