பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருமுருகா ற்றுப்படை விளக்கம். - ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்துஇனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத் தன்றே. (ஒரு முகம், பக்தர்கள் போற்றிப் புகழ, அவர்களுக்கு ஏற்கும்படியாகப் பொருந்தி இனிதாகச் சென்று விருப்பத் தோடு மகிழ்ந்து வரத்தைக் கொடுத்தது. ஆர்வலர்-அன்புடையவர்கள்; பக்தர்கள். அமர்ந்து: -பொருந்தி. கொடுத்தன்று-கொடுத்தது.) வேள்வியைக் காக்கும் முகம் இந்த காட்டில் வெவ்வேறு சாதிகளும் வெவ்வேறு. சமயங்களும் இருந்தாலும், எல்லாரையும் பொதுவாக இந்துக்கள் என்று இப்போது குறிப்பிடுகிருேம். ஆனல் அது பழைய பெயர் அன்று. இந்து மதம் என்பதும் புதிய பெயரே. மேல் காட்டினர் இந்த காட்டில் புகுந்தபோது முதலில் விந்து நதியைக் கண்டார்கள். அதை அவர்கள் இந்து என்று சொன்னர்கள். அதிலிருந்து இந்த காட்டை. இந்தியா என்றும் இங்குள்ள மக்களே ஹிந்துக்கள் என்றும் சொன்னர்கள். அந்தப் பெயர்களே கிலேத்து: விட்டன. - இந்து மதம் என்பது புதிய பெயரானல் இதற்குப் பழம் பெயர் என்ன என்ற கேள்வி எழும். வைதிக மதம் என்பதுதான் இந்த காட்டுச் சமயங்களின் பொதுப் பெயர். வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளும் சமயங்கள் யாவும் வைதிக சமயங்கள். அவை இந்து மதத்தின் பிரிவுகள், வைஷ்ணவம், சைவம், சாக்தம், கெளமாரம், காண பத்தியம், செளரம் ஆகிய எல்லாச் சமயங்களும்: வேதத்தையே பிரமான நூலாகக் கொள்வன.