பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் 129 வேதத்தோடு ஒட்டிச் சொல்லப்பெறுவது வேள்வி வேதம் அறிந்த அந்தணுளர்கள் வேள்விசெய்யும் கடப்பாடுடையவர்கள். அவர்கள் வேத முறைப்படி எரியோம்புவதனால் உலகமே துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தை அடைகிறது. - - 'கற்ருங்கு எரிஓம்பிக் கவியை வாராமே செற்ருர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்’ என்று தில்லைவாழ் அந்தணரைச் சொல்லுகிருர் சம்பந்தர். வேதமும் வேள்வியும் போற்றப் பெறுபவை: இறைவனுடைய சொரூபமாகவே எண்ணத்தக்கவை, 'வேதமும் வேள்வியும் ஆயினர்க்கு” என்பது திருவாசகம், வேள்வியினல் மழை தவருமல் பெய்யும். நாடு நலம்பெறும். வேதமந்திர விதிப்படி அந்தணர் வேள்வி செய்வார்கள், வேள்வியில் தேவர்களே மந்திரங்களால் அழைத்து அவியுணவு வழங்குவது மரபு. அவியுணவை ஏற்றுக் கொள்வதல்ை திருவள்ளுவர் தேவர்களே, 'அவியுணவின் ஆன்ருேர்’ என்று கூறுகிருர், அந்தணர் வேள்வி புரிவதனல் தேவர்களுக்கு உணவு கிடைக்கிறது: அவர்களால் உலக மக்களுக்கு மழையும் பிற நன்மைகளும் கிடைக்கின்றன. ஆதலின் வானமும் வையமும் வாழக் காரணமாகிறது வேள்வி. வானமும் வையமும் வாழவேண்டு மென்ற திருவுள்ளம் உடையவன் முருகன். தேவர்களுக்கு வரும் இடையூறுகளைப் போக்கி அவர்கள் வாழ வகை செய் கிறவன். இமையவர் நாட்டினில் கிறைகுடி யேற்றிய' பெருமான் அவன். gG-9