பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - திருமுருகாற்றுப்படை விளக்கம் தேவர்களுக்குப் பகைவர்கள் அசுரர்கள். யாரேனும் வேள்வி செய்தால் அதற்கு இடையூறு செய்ய அசுரர்கள் முயல்வார்கள். அப்போது அவர்களேப் போக்கித் தேவர்கள் தமக்குரிய அவியுணவைப் பெறுமாறு செய்வான் முருகன். வேள்வியில் மும்முறை சுப்ரம்மண்யோம்!' என்று முழங்குவார்களாம். முருகன் யாகத்தைப் பாதுகாக்கும் பேராளன். ஆதலின் அவ்வாறு செய்கிருர்கள். அவனுக்கு ஸ்தோம ரட்சகன் என்பது ஒரு பெயர். அதற்கு வேள்வி காவலன் என்று பொருள், 'அந்தண்மறை வேள்வி காவற்கார' என்று அருணகிரிநாதர் பாராட்டுவார். இவ்வாறு, அந்தணர்கள் வேதமந்திர விதியின்படி சம்பிரதாயத்தினின்றும் வழுவாமல் செய்கிற வேள்வி களே யாதோர் இடையூறும் இன்றி கிறைவேற்றத் திருவுள்ளங்கொண்டு ஆவன செய்யும் செயலே, முருகனு டைய மூன்ருவது திருமுகம் புரிகின்றது. ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்விஓர்க் கும்மே. - (வேத மந்திர விதியின்படியே சம்பிரதாயத்தினின்றும் வழுவாத அந்தணர்களுடைய யாகங்களே கன்ருக கிறை வேற்றத் திருவுள்ளம் கொள்ளும் ஒரு முகம், மந்திர விதி-வேத மந்திர விதி. மந்திரம் என்பதே வேதத்துக்கு ஒரு பெயர்; ஆதலின் வேதவிதி என்றும் சொல் லலாம். மரபுளி-சம்பிரதாயத்தின்படி; மரபு-வழி வழி வந்த வழக்கம், ஒர்க்கும்-கினேக்கும்.) *.