பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் - 131 மெய்ஞ்ஞானத் திரு முகம் இனி நான்காவது முகத்தின் புகழைச் சொல்லத் தொடங்குகிருர், . அறிவு என்பது கடல்போல விரிந்தது. அதற்கு எல்லை கட்டி, எல்லாம் அறிந்துவிட்டேன் என்று சொல்லும் ஆற்றல் உள்ளவர் யாரும் இல்லை. 'ஆய்ந்தே கடந்தான் அறிவென்னும் அளக்கர்’ என்று கம்பன் அறிவைக் கடலாகச் சொல்கிருன், கடலுக்குப் பல துறைகள் இருப்பதுபோல அறிவுக்கும் பல துறைகள் உள்ளன. பொருள்களே அறிய அறிய அறிய வனுடைய அறிவு விரிந்துகொண்டே செல்கிறது. அதே சமயத்தில் அவன் தான் அறியவேண்டியவை இன்னும் பல பல என்ற உண்மையை உணர்கிருன், : 'அறிதோ றறியாமை கண்டற்ருல்' என்று திருவள்ளுவர் சொல்கிருர். பருப்பொருள்களாகிய காட்சிப் பொருள்களைக் கண்டு முடிப்பதற்கே மனித லுடைய ஆற்றல் போதாது. . அறிவிற் சிறந்தவர்களே விஞ்ஞானிகள் என்று உலகம் பாராட்டுகிறது. அவர்கள் புதிய புதிய பொருள்களைக் கண்டு பிடிக்கிருர்கள். அவ்வாறு கண்டுபிடிப்பனவற்றை இரண்டு வகையாகப் பிரித்துச் சொல்வார்கள். முன்னே உள்ள பொருளே இதுகாறும் காணுமல் இருந்து இப்போது புதிதாகக் கண்டுபிடிப்பது ஒரு வகை. இதை டிஸ்கவரி" (Discovery) என்று சொல்வார்கள். பெளதிக சக்திகளே இணைத்துப் புதிய விளைவு உண்டாகச் செய்து கண்டு பிடிப் பது ஒரு வகை. அதை, இன்வென்ஷன் (Invention) என் பார்கள், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அவர் உள்ளதை அறியாமலிருந்து புதிதாகக் கண்டு