பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருமுருகாற்றுப்படை விளக்கம் பிடித்தார். அது 'டிஸ்கவரி ஆகும். ஆல்ை ஒரு விஞ்ஞானி மின்சாரத்தைக் கண்டு பிடித்தார்; பெளதிக சக்தியின் ஒரு வகை இயக்கத்தால் அதனே உண்டாகச் செய்து கண்டுபிடித் தார். இது இன்வென்ஷன்' ஆகும். முன்னேயதில் புதுமை, காட்சியைச் சார்ந்தது. பொருள் பழையது: கண்டது. புதியது. பின்னேயது, விளேவே புதியது. ஆனாலும் அந்த விளைவுக்கு மூலகாரணமாகிய பெளதிக சக்திகள் பழைய னவே, இணைப்பினல் வந்த விளைவு புதியது. புதிய பொருள் களே உண்டாக்கி அவற்றைக் கொண்டு விஞ்ஞானி அந்தப் புதிய விளைவை உண்டாக்கவில்லை. முதல் கண்டுபிடிப்பு, பழையதை அப்படியே கண்டு பிடித்தது. இரண்டாவது, பழைய பொருள்களால் உண்டான புதிய விளைவைக் கண்டு. பிடித்தது. எப்படியும் பழைய பொருள் இல்லாமல் ஏதும் இல்லே. இப்படிக் கண்டு பிடிக்கும் விஞ்ஞானிகள், இனிக்கண்டு: பிடிக்க வேண்டியது ஏதும் இல்லே என்று சொல்லும் நிலைக்கு வரவே இயலாது. சந்திரனே முயன்று அடைந்து, விட்டார்கள், அந்தக் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது மிகுதியாயிருக்கிறது. மற்றக் கிரகங்களைபபற்றி: ஆராய இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ? கணக்கில் அடங்காத நட்சத்திரங்கள் உள்ளன. இதுவரையில் கண்டு: பிடிக்கப்பட்ட கட்சத்திரங்களேவிட இன்னும் பல பல வான வெளியில் உள்ளன. அவற்றையெல்லாம் கண்டுபிடித்து அறுதியிட மனிதனுல் ஆகுமோ, என்னவோ! ஆனல் ஒருவன் மட்டும் இவ்வளவையும் அறிவான். அவன் எல்லாவற்றையும் படைத்தவைைகயால் அவனுக் குத் தெரியாமல் ஏதும் இருக்க நியாயம் இல்லை, அவன் தான் இறைவன். அணுவுக்குள் அணுவாய் விபுவுக்கும்.