பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 f திருமுருகாற்றுப்படை விளக்கம் தலையான அறிவு. ஞான குருக்கள் அகனே விளக்கு வார்கள். அவர்கள் முனிவர்களிடம் உபதேசம் பெற்ற வர்கள். அந்த முனிவர்களிற் சிறந்தவர்கள் சனகர். சனந்தனர், சனத்குமாரர், சனக்சுஜாதர் என்னும் நால்வர். அத்த கால்வருக்கும் உபதேசம் செய்தவர் கட்சிணுமூர்த்தி. அடையின்றிக் குரு என்ருல் அது தட்ணுசிமூர்த்தியையே குறிக்கும். உலகிலுள்ள ஆசிரியன்மார்கள் தம் மாணுக்கரை நோக்கக் குருக்களாக இருப்பார்கள். அவர்களுடைய குருநாதர்களே நோக்க அவர்கள் மாணுக்கர்களாக இருப் பார்கள். இந்த இருவகைப் பண்புகளும் அவர்களிடம் உண்டு. தட்சினமூர்த்தி யாவருக்கும் மேலான குருகாதாாக, சிறந்த மாளுக்கர்களுக்குச் சின் முத்திரையில்ை உபதேசம் செய்த ஆசிரியராக, விளங்குகிருர். அவர் யாருக்கும் மாளுக்கராக இருக்கவில்லே, ஆனல் அவரையும் மாணக்கராக்கி அவருக்கே உபதேசம் செய்த பெருமான் முருகன்; அதனல் குமர குருபரன் என்றும் குருசாமி என்றும் திருகாமம் பெற்ருன். முருகனுடைய பெருமைகள் பல. அவன் வரம்பிலா ஆற்றலுடையவன். இணையிலா அழகுடையவன். எல்லே யிலாப் பெருங் கருணையாளன். அறிவுப் பெருமையையே சிறந்த பெருமையாகப் பாராட்டுவது அறிஞர் இயல்பு. முருகனுடைய புகழையெல்லாம் விரிவாகப் பாடத் தொடங்கினர் அருணகிரிநாத முனிவர் பிரான். பதிருையிரம் திருப்புகழ்களைக் கங்கை வெள்ளம் போலக் கொட்ட கின்ற மேகம் அவர் எல்லையில்லாத இறைவன் புகழில் எதை முதலில் சொல்வது? முகப்பு கன்ருக இருக் தால் கட்டிடத்துக்குப் பெருமை உண்டு. முருகன் திருப் புகழாகிய பெரிய திருமாளிகையில் முன்வாயில் தோரண மாக எதை அமைப்பது? அவன் அழகைச் சொல்லலாமா?