பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் 135 ஆற்றலைச் சொல்லலாமா? அருளைச் சொல்லலாமா?-இந்த யோசனை அருணகிரி நாதருக்கு எழுந்தது. அவன் ஞான மயமானவன், ஞான குருவிற் சிறந்தவன் என்பதை முதலில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று திர்மானம் செய்தார். - 'முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனஒதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண என்று பாடத் தொடங்கிவிட்டார். கால்வருக்குக் குருநாதனுக விளங்கியவரும் ஞானக் கண்ணேயுடைய மூர்த்தியுமான முக்கட்பரமர், 'குருபர' என ஒதி வணங்க, அவருக்குச் சுருதியின் முற்பட்டதைக் கற்பித் தான் முருகன் என்ற வரலாற்றைச் சொன்னர். ஆகவே, முருகன் தனக்குமேல் குருவின்றி, தான் யாருக்கும் மாளுக்கனகாமல், பெரிய குருவாக, குமரகுரு பாகை விளங்குபவன். மற்ற இடங்களில் எல்லாம் திராத ஐயங்களே அவன் தீர்த்துவிடுவான். - இவ்வாறு, தெளிவில்லாமல் உள்ள பொருள்களே விளக்கும் செயலே அவனுடைய திருமுகங்களில் ஒன்று செய்கிறதாம், - - ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற காடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே.