பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமுருகாற்றுப்படை விளக்கம்

முதற் பாட்டு

மிழ் மொழியை அடைகளாலே சிறப்பித்துப் .பேசுவது ஒரு வழக்கம். வண்டமிழ், தண்டமிழ், செந்தமிழ் என்பன போலத் தமிழின் பெருமையைப் புலப்படுத்தச் சில அடைகளைச் சேர்த்துப் புலவர்கள் நூல்களிலே வழங்கியிருக்கிறார்கள். முத்தமிழ் என்றும் சொல்வது உண்டு. சங்கக் தமிழ் என்பது ஒருவகைத் தொடர்.
"சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே" என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியிருக்கிறாள்,

சங்கத் தமிழ்

சங்கத்தில் வளர்ந்தது சங்கத்தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெடுங்காலமாகத் தமிழ் நாட்டில் தமிழ்ச்சங்கம் வளர்ந்து வந்தது. பாண்டிய அரசர்கள் அதனை வளர்த்து வந்தார்கள். மூன்று சங்கங்கள் இருந்தன என்றும், அவற்றைக் தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என்ற குறிப்பது வழக்கமென்றும் அறிகிறோம்; கடைச்சங்கம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பாண்டிநாட்டுத் தலைநகராகிய மதுரையில் இருந்து வங்கது. அதில் பல புலவர்கள் இருந்து தமிழை ஆராய்ந்தார்கள்.