பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருமுருகாற்றுப்படை விளக்கம் (ஒரு முகம், நூல்களாலும் ஆசிரியர்களாலும் விளக்க முருமல் எஞ்சி கின்ற பொருள்களே, அவற்றை உணர வேண்டும் என்ற வேட்கையுடன் முருகனைப் பணிந்து கிற்கும் அடியவர்கள் இன்பம் அடையும்படியாக ஆராய்ந்து, சந்திரனேப் போல அவர்கள் கேட்ட துறையின் பகுதிகளே யெல்லாம் விளங்கும்படி செய்யும். எஞ்சிய-விளக்கமுருமல் மிஞ்சிய. ஏம் உற-இன்பம் உண்டாக திசை-பகுதிகள்) அறிவுக்குச் சக்திரனேக் கூறுவது மரபு. "திங்க ளன்ன கல்வியும்' என்பது ஆத்திரையன் பேராசிரியன் பாட்டு, முருகன் திருமுகங்களில் ஒன்ருகிய இது ஒளியும் தண்மையும் வடிவும் சந்திரனேப் போலத் தோற்றி ஒளிர் கின்றது. அந்த ஒளியில்ை, விளங்காத துறைகளே யெல் லாம் அந்த முகம் விளக்கிக் காட்டுகிறது. இது மெய்ஞ் ஞானத் திருமுகம். - வீரத் திருமுகம் ஆடவர்களுக்கு இன்றியமையாத இலக்கணம் ஆண்மை. அந்தச் சொல்லுக்கே ஆணின் தன்மை என்பது பொருள். ஆண்மை என்பதற்கு வீரம் என்பது பொருள். ஆகவே ஆடவலுக்குத் தலைமையாக இருக்க வேண்டியது வீரம். வீரம் சில சமயங்களில்தான் கன்கு வெளிப்படும். போரில் வெளிப்படும். முருகன் வீரம் உடையவன் என்று சொன்னல் மட்டும் போதாது. அவன் வீரருள் வீரன். வேறு யாராலும் அழிப்பதற்கு அரிய பகைவரை மாய்த்தவன். இதிகாச புராணங்களாலே சிறப்பிக்கப் பெறும் போர் களில் மூன்று முக்கியமானவை; பெரியவை. ஒன்று