பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் 137 தேவருக்கும் அசுரருக்கும் நிகழ்ந்த போர்: அதில்தான் சூரபன்மன் முருகனே எதிர்த்து கின்ருன். அடுத்தது இராமாயணப் போர்; அதில் இராமனும் இராவணனும் போர் செய்தனர். மூன்ருவது போர் பாரதப்போர்: அதில் துரியோததிையரும் பஞ்சபாண்டவரும் போரிட் டனர். இந்த மூன்றையும் தேவாசுர மாபாரத ராமா பயணம் என்று சேர்த்துச் சொல்வது ஒரு வழக்கம். இந்த மூன்றிலும் மிகப் பெரியது தேவாசுரப் போர். முருகனும் சூரனும் செய்த போரின் கடுமையைக் கந்தபுராணத்திலே காணலாம். அப்போர் பத்து நாட்கள் கடந்ததாக அப்புராணம் கூறுகிறது. ஆனல் அதன் கடுமை -யைப் புலப்படுத்த வேண்டி, அது பல காலம் கடந்ததாகச் சொல்வது உண்டு. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் கடந்தது; இராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள் கடந்ததாம். தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நிகழ்ந்ததாம். இப்படி ஒரு கணக்குச் சொல்வார்கள். தேவாசுரப் போர் எல்லாவற்றிலும் மிகக் கடுமையானது என்ற கருத்தைத் தெரிவிக்கவே இந்தக் கணக்கு ஏற் பட்டது என்று தோன்றுகிறது. 'உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென் றியாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள’ என்ற சிலப்பதிகாரப் பகுதியும் (27.8-10), அதற்கு அரும்பதவுரை யாசிரியர், தேவாசுர யுத்தம் பதினெட் டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டு மாதத் திலும், பாண்டவ துரியோதன புத்தம் பதினெட்டு காளி லும், செங்குட்டுவ லும் கனகவிசயரும் செய்த யுத்தம்