பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருமுருகாற்றுப்படை விளக்கம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்த என்றெண்ண' என்று. . எழுதிய உரையும் இதை விளக்கும். அத்தகைய கடும்போரில் முருகன் வெற்றிபெற்ருன், பகைவர்களில் பெரிய பகையாகிய குரனை மாய்த்தருளினன். ஆதலின் அவன் எல்லா வீரர்களிலும் சிறந்த வீரன். அவனிடமுள்ள படைக்கலமோ எல்லா ஆயுதங்களிலும் சிறந்தது. எத்தனேயோ வகையான படைக்கலங்கள் இருக்க தாலும் வில், வாள், வேல் என்ற மூன்றையும் சிறப்பாக எடுத்துச் சொல்வார்கள். அவற்றிலும் வேல் மிகச் சிறந்தது. அந்தச் சிறந்த ஆயுதத்தை எப்போதும் திருச்கரத்தில் வைத்திருக்கும் பெருவீரன் முருகன். பகைவர்களே அடியோடு தேய்த்து இல்லையாக்கும். பெருவலி படைத்தவன் முருகன். தேவர்களைப் பாது காக்கக் கங்கணம் கட்டிக்கொண்டவளுதலின், அசுரர் களால் அவருக்கு எந்த இடையூறு வந்தாலும் அதைப் போக்குகிறவன் கந்தபுராணம் சொல்லாத பல போர்களில் அவன் தேவர்களுக்கு வெளிப்படையாகவும் மறைவாகவும் கின்று துணை செய்தவன். சமங்கள் பலவற்றில் மிக்க ஊக்கத்தோடு சென்று போரிட்டு வென்றவன். தமிழ் நாட்டில் போரைப்பற்றிச் சொல்லும் நூல்கள் பல உண்டு. அதற்கு இலக்கணம் வகுப்பது புறப்பொருள் இலக்கண நூல், போர் நிகழ்ச்சியைத் திணைகளாகவும்: துறைகளாகவும் விரித்துச் சொல்வது புலவர் மரபு. அந்த விகழ்ச்சிகளில் போர் புரிபவர்கள் முருகனைத் துதித்துக் கூத்தாடும் துறைகளும் உண்டு. வெட்சி முதலிய திணைக. ளாக வகுத்திருக்கிருர்கள், புறப் பொருளே. அகப்பொருளில் முதல் திணையாகிய குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன். புறப் பொருளிலும் முதல் திணையாகிய வெட்சிக்கும்