பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் - 139 , முருகனுக்கும் தொடர்பு உண்டு. வெட்சிப்பூ முருகனுக்கு உரியதல்லவா? வீரம் செறிந்த திண்டோளேயுடையவன் முருகன். தோள் வலிமைக்கு இருப்பிடம். முருகனுக்குப் பன்னி ரண்டு தோள்கள். வேறு தெய்வங்களுக்கு அத்தனே தோள்கள் இல்லை. வலிமைக்குரிய தோள்களின் மிகுதி யாலும் அவனுடைய மிடுக்கையும் வீரத்தையும் தெரிந்து கொள்ளலாம். . இவ்வாறு வீரசிகாமணியாக இருக்கும் முருகன், வெஞ்சமத்தல் புக்குப் பகைவர்பால் சினம் கொண்ட உள்ளத்தோடு அவர்களே அழித்து வெற்றி பெறுகிருன். போரில் வெற்றி பெற்றவர்கள் போர்க்களத்தைத் தம்முடையதாக்கிக்கொண்டு. வெற்றிமகளாகிய கொற்ற வையை வழிபட்டுக் களவேள்வி செய்வது ஒரு மரபு. பேய்கள் மற்றக் காலங்களில் உணவு பெருமல் திண்டாடு மாம், போர் வந்துவிட்டால் அவற்றிற்குக் கொண்டாட் டம், தம்முடைய தகூவியாகிய கொற்றவையை வாழ்த்திக் கூத்தாடும், களவேள்வி புரியத் துணை செய்யும். இந்த நிகழ்ச்சிகளைப் பரணி நூல்களில் விரிவாகக் காணலாம், களவேள்வி செய்து வெற்றியை நிலைசிறுத்திக் கொள்வதும், கொற்றவையைப் போற்றுவதும், பேய்களுக்கு விருந்தளிப்பதும் போரின் முடிவில் நிகழ்பவை. அவை நிகழ்வதாகப் பாடுவது கவிசமயம், . முருகன் இந்த மரபு தவருமல் கடக்கிருன், செறுகர் களேத் தேய்த்துச் சமத்தைப் போக்கிச் சினம் மிக்க உள்ளத்தோடு வெற்றி பெற்றுப் பிறகு களவேள்வியைச் செய்கிருன் இவ்வாறு செய்யும் செயலில் ஈடுபட்டிருக் கிறது ஒரு முகம்.