பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#40 திருமுருகாற்றுப்படை விளக்கம் - ஒருமுகம் செறுகர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே. (ஒருமுகம் போர் செய்யும் பகைவர்களே அடியோடு அழித்து. வருகிற போர்களே ஒழித்துச் சினம் கொண்ட கெஞ்சத்தோடு வெற்றிக்கு அறிகுறியாகக் களவேள்வி யைச் செய்கின்றது. செறுநர்-பகைவர். சமம்.போர். முருக்கி-தோல்வியுறச் செய்து, கறுவு.சினம். வேட்டன்று-வேட்டது.) செல்சமம் முறுக்கி என்பதற்கு, தன் திருவுள்ளத் திலே ஏறிய நடுவுகிலேமையைப் போக்கிவிட்டு என்று கச்சினர்க்கினியர் உரை வகுக் கிருர். எல்லோரிடமும் ஒருபடித்தான அருளே வழங்கவேண்டிய முருகன். அந்த கடுவு கிலேமையைச் சிறிதே மாற்றி அசுரர்களே மறக் கருணையாலே கொல்லவேண்டுமென்று எண்ணுகிருளும். நடுவு கிலேமையினின்றும் மாறியது போலத் தோன்றி லுைம் இதுவும் அருள்தான். நோய்வந்தவனது உடம்பை அறத்து மருத்துவம் செய்வதுபோல, தன்னே வழிபடாமல் தன் அடியார்களுக்குத் திங்கு புரிபவர்களுடைய வெய்ய பண்பை மாற்றவே இவ்வாறு மறக் கருணை புரிகிருன். அழுக்குப் படிந்த வேட்டியைக் கல்லிலே மோதி வெளுப்பது போன்ற செயல் இது. வேட்டியைக் கல்லில் துவைப்பவன் அதன்மேல் கோபம் கொண்டு செய்கிற காரியம் அல்ல அது. வெளுக்கவேண்டும் என்பதே அவன் நோக்கம். அவ்வாறே முருகன் கொடுமை பல செய்த அசுரர்களே மோதி அருள் செய்தான். இப்படி வீரம் காட்டும் திரு முகத்தை உடையவன் முருகன்.