பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் - - - 141 . - மகிழும் முகம் முருகப்பெருமானுடைய திருமுகங்கள் ஆறையும் அவற்றின் செயல்களையும் சொல்லி வருகிருர் நக்கீரர் ஒளி தரு முகமும், அன்பருக்கு அருளும் முகமும், வேள்வி காக் கும் முகமும், ஞானம் உணர்த்தும் முகமும், வீரம் விளக்கும் முகமுமாக ஐங்தைப்பற்றி இதுவரையில் பார்த்தோம். இனி ஆருவது முகத்தைப்பற்றிச் சொல்கிருர், அது உலகமெல் லாம் இன்ப வாழ்வு பெறுவதற்காக வள்ளிநாயகியோடு மகிழ்ந்து விளங்குகிறதாம். திருப்புகழில் ஒரு பாடல் இந்த ஆறுமுகங்களின் செயல்களேயும் புலப்படுத்துகிறது. 'ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறும்.அடி யார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணுசலம் அமர்ந்த பெருமாளே.' இந்தப் பாட்டிலும் இறுதியில், "வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே" என்று ஆருவது முகத்தின் செயலேச் சொல்கிருர் அருணகிரியார். திருமுருகாற்றுப்படை, ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு ககையமர்ந் தன்றே (ஒருமுகம், குறவருடைய மடமகளும் கொடி போன் இடையையுடைய மடமுடைய பெண்ணுமாகிய வ: யோடு சேர்ந்து புன்முறுவலே விரும்பிச் செய்கின்றது.)