பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 திருமுருகாற்றுப்படை விளக்கம் என்று கூறுகிறது. வள்ளியெம்பிராட்டியை, குறவர் மட மகள் என்றும் கொடிபோல் நுசுப்பின் மடவரல் என்றும், வள்ளியென்றும் குறிக்கிறது. அந்தப் பெருமாட்டியோடு மகிழ்ந்து தங்குதலே ஒருமுகம் விரும்புகிறதாம். இந்திராதி தேவர்கள் தம்முடைய வாழ்வை இழந்து மகிழ்ச்சியை இழந்து துன்புற்று வருக்கிய காலத்தில் அவர் களுடைய பகைவர்களாகிய அசுரர்களேத் தடிந்து மீண்டும் பழைய வாழ்வை அவர்கள் பெற வைத்தான் முருகன். அவர்கள் முகத்திலிருந்த வாட்டம் நீங்கி மலர்ச்சி உண்டா யிற்று. அவர்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களானர்கள். இவ் வாறு முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கிய முருகன், தான் மகிழ்ச்சி பெற ஒரு மடமங்கை யைத் தேடினன் என்பது பொருந்துமா என்ற கேள்வி எழும். - - முருகன் செய்யும் திருவிளையாடல்கள் பல உயிர்க் கூட்டங்கள் பாசத்தினின்றும் விடுதலைபெற்றுத் தன்னை அடைய வேண்டும் என்று எப்போதும் திருவுள்ளம் கொண்டவன் அவன். ஆதலின் பலப்பல கோலம் புனேந்து எவ்வாறேனும் அவர்களே ஆட்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிருன். மக்கள் இம்மையில் கல்வாழ்வு பெற்று அறம் பொருள் இன்பம் மூன்றையும் நெறிபிறழாது அடைந்து பின்பு வீட்டைப் பெறவேண்டும். இவ்வுலகில் மனைவி மக்களோடு வாழ்ந்து இறைவன்பால் அன்பு செய்து பிறகு மறுமையில் வீடுபெறவேண்டும். மனிதர்கள் தம் வாழ்க்கைத் துணேவிக ளாகிய இல்லத் தரசிகளோடு மனம்பொருந்தி வாழவேண்டும் என்பதற்காகவே தானும் அருளே வடிவாகிய அன்னேயுடன் எழுந்தருளியிருக்கிருன், மடவரல் வள்ளியோடு மகிழ்ந்து.