பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகங்கள் . 143 அமர்ந்திருப்பது, உலகத்தார் தக்க வாழ்க்கைத் துணைவியரு டன் இல்லற இன்பம் பெற்று அறவாழ்வு கடத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆடலாசிரியன் தன் மாணுக்கர்களுக் குத் தான் ஆடிக்காட்டுவது போல இந்தத் திருவிகளயாடலை அவன் செய்கிருன். இந்தப்பகுதிக்கு உரை வகுத்த நச்சினர்க் கினியர். காமநுகர்ச்சி இல்லாத இறைவன் இங்ங்னம் நகை யமர்ந்தான், உலகில் இல்வாழ்க்கை நடத் தற்கென்று உணர்க. அது, "தென்பா லுகந்தாடும் தில்லேச்சிற் றம்பல வன்' என்பதனுள், "பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு கிலத்தோர், விண்பாலி யோகெய்தி விடுவர்காண்சாழலோ' என்பதனுன் உணர்க' என்று எழுதியதையும் காண்க. தேவமகளாகிய தேவயானையுடன் அமர்ந்து மகிழும் ஆண்டவன் குறவர் மடமகள் என்று எண்ணுமல் அவளு டன் மகிழ்ந்தான் என்றது, அவனது பரம கருணையைக் காட்டுகின்றது. . குறவர் மகளாகிய வள்ளி மடப்பம் உடையவள்; மட மகள். மடம் என்பது அறியாமை என்னும் பொருளுடை .யது. கான் ஒன்றை அறிந்தும் அறியாதவள் போல் அடங்கி யிருக்கும் குணம் மடம், அது மகளிருக்கு ஆபரணம் போன் றது. "பேதைமை என்பது மாதர்க் கணிகலம்' என்று பெண்களிற் பெரியராகிய ஒளவையார் கூறியிருக்கிரு.ர். கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்று மடத் தின் இலக்கணத்தைப் புலவர்கள் அமைப்பார்கள் தம் முடைய கணவர்பால் தமக்குத் தெரிந்ததை உடனே காட் டாமல் அடங்கியிருக்கும் உயர்குணம் இது மற்றவர்களிடம் அறிவிலாரைப்போல கடப்பதி அன்று.