பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

திருமுருகாற்றுப்படை விளக்கம்

தாங்களே பல நூல்களை இயற்றியதோடு, வேறு எந்தப் புலவர் நூல் இயற்றினாலும் அதனைப் பார்த்து நல்லதாக இருந்தால் நல்ல நூல் என்ற சொல்லி வந்தார்கள். தமிழ்ச்சங்கத்தில் எந்த நூலையும் அரங்கேற்ற வேண்டுமென்ற நியதி அந்தக் காலத்தில் இருந்தது. சங்கத்தில் ஏறியபோதுதான் தமிழ் நூலுக்கே மதிப்பு உண்டாயிற்று. ஆகவே, தமிழ்நாட்டில் உலவிய தமிழ் நூல்கள் அத்தனையும் சங்கதினாலே அங்கீகாரம் பெற்றனவாகவே உலவின. இந்தக் காரணத்தினால் தமிழைச் சங்கத் தமிழ் என்று சொன்னார்கள்.

மூன்று வரிசைகள்

கடைச் சங்க காலத்தில் எழுந்த பல நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. புலவர்கள் அவ்வப்போது பாடிய தனிப்பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இடையிலே அவற்றையெல்லாம் தமிழ்நாடு இழந்து விட்டது. பின்பு வந்தவர்கள், கிடைத்த பாடல்களைத் தொகுத்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். நீண்ட பாடல்கள் சில கிடைத்தன, சிறிய பாடல்கள் பல கிடைத்தன. இவற்றையெல்லாம் பிரித்து மூன்று வரிசையாக ஆக்கினார்கள், பத் துப் பாட்டு, எட்டுக்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அவை. அந்த மூன்றில் பத்துப்பாட்டு என்ற வரிசையில் பத்து நீண்ட பாடல்கள் இருக்கின்றன. எட்டுத்தொகை என்ற வரிசையில் எட்டு நூல்கள் இருக்கின்றன; பல சிறிய சிறிய பாடல்களைக் கொண்டவை அவை: அகனால் எட்டுத்தொகை என்ற பெயர் வந்தது. பதினெட்டு நூல்களை ஒன்றாகச் சேர்த்த தொகுதியே பதினெண்கீழ்க்கணக்கு என்பது. திருக்குறள் அதில் சேர்ந்ததுதான். பிற்காலத்தில் எழுந்தது இந்த வரிசை என்று (ஆராய்ச்சியாளர்) சொல்வார்கள்.