பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களும் இயற்றும் செயல்களைச் சொன்ன நக்கீரர் அவனுடைய பன்னிரண்டு திருக்கரங்களின் செயல்களைச் சொல்ல வருகிருர் அந்தத் திருமுகங்கள் எந்த எந்தச் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனவோ அவற்றிற்கு ஏற்ற காரியங்களேயே திருக்கரங்களும் செய்கின்றன. ஒன்றைேடு ஒன்று பொருந்தாத செய்கைகளைச் செய்வது நமக்கு இயல்பு. இறைவனே எல்லா உயிர்களுக்கும் வேண்டியவற்றை வேண்டியபடியே தடுமாற்றம் இல்லாமல் செய்கிருன். ாமக்கு அவன் புரியும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒன்றைேடு ஒன்று தொடர்பு இல்லாதவை போலத் தோற்றும். ஆனல் அவை யாவும் ஒரு கியதிப்படியே நடைபெறும். அவனுடைய ஆணேயின்படி ஒழுங்காக யாவும் கடை பெறும். இயற்கையிலே அமைந்திருக்கும் ஒழுங்கையும் கியதியையும் கவனித்தால் இவ்வுண்மை விளங்கும். - திருத்தோள்கள் முருகனுடைய தோள்கள் பெருமையுடையவை; அழகுடையவை; வீரமுடையவை. அவை நிமிர்ந்துள்ள தோள்கள். மார்பிலே மூன்று வரிகள் வளைந்து இரண்டு பக்கத்திலும் உள்ள தோள்களில் சென்று சேருவது உத்தம ஆடவர் இலக்கணம். - வரையகல் மார்பிடை வரியும் மூன்றுள' என்று சீவக சிந்தாமணி கூறுகிறது. முருகனிடம் அந்த இலக்கணம் நிறைந்திருக்கிறது. திருமார்பில் அழகிய