பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் l 147 முத்துமாலேயை அணிந்திருக்கிருன். இயல்பாகவே சிவந்த வரிகள் மூன்று மார்பிலே குறுக்கே உள்ளன. அவற்றைத் தாம் ஏற்றுக் கொண்டவைபோலத் தோள்கள் இருமருங்கும் விளங்குகின்றன. ஆகவே முருகன் மார்பு ஆரம் தாழ்ந்த மார்பு, அம் மார்பு (அழகிய மார்பு), பகட்டு மார்பு (பெருமையையுடைய மார்பு), செம்பொறியை உடைய மார் ls. * ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார் பின் செம்பொறி வாங்கிய. (மாலை தாழ்ந்து விளங்கும், அழகிய பெருமையை யுடைய திருமார்பிலுள்ள சிவந்த ரேகைகளை வாங்கிக் கொண்ட-தோள் என்று கூற வருகிருர். ஆரம்-முத்து மாலை; பிற மாலைகளேயும் சொல்லலாம். தாழ்ந்த-தொங்கிய. பகடு-பெருமை. பொறி-ற்ேறு கோடு. வாங்கியஏற்றுக்கொண்ட, மார்பிலுள்ள கோடுகள் தோளளவும் செல்வதைத் தோளின் செயலாக வைத்து அவை வாங்கிக் கொண்டன என்ருர்.1 திருமார்பிலுள்ள வரிகளைத் தோள்கள் வாங்கிக் கொண்டன என்று சொல்லப் புக்கவர் அந்த மார்பையும் வருணித்தார். தோள்கள் எவ்வாறு உள்ளன? அவை வலிமையை உடையன. ஆடவர்கள் ஆண்மை உடையவர்கள். ஆண்மைக்கு இருப்பிடம் தோள்கள், முருகன் பேராண்மைக்காரன். - - "செந்தில்நகர் வாழும் ஆண்மைக்கார' என்பது திருப்புகழ். அந்தச் செந்தில் நகர் வாழும் ஆண்மைக் காரனப் பற்றித்தானே நக்கீரர் இப்போது சொல்கிருர்? முருகன் திருமேனி சுடர்விடுவது, தேவர்கள் யாவருமே சுடர்விடும் திருமேனி யுடையவர்கள் முருகனே சதகோடி சூரியர்கள் உதயமானம் போன்ற ஒளிபடைத்த