பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருமுருகாற்றுப்படை விளக்கம் திருமேனியை யுடையவன். பிரமமாய் கின்ற சோதிப் பிழம்பே ஒரு மேனி கொண்டு கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு வந்த கிலேயே: முருகன். ஆதலின் அவன் உருவமும் அதில் உள்ள அங்கங்களும் சோதி படைத்தவை. தோள்களும் சுடர்விடும் இயல்புடையவை. அந்தத் தோள்கள புகழ் நிரம்பியவை. வீரத்தால் உண்டாவதைப் பிரதாபமென்றும் ஈகையால் உண்டாவதைக் கீர்த்தி என்றும் சொல்வது மரபு. இரண்டையும் புகழ் என்று சொல்வர். ஈகையால் வரும் புகழை வண் புகழ் என்பார்கள் வண்மையால் வந்த புகழ், என்று பொருள். முருகனுடைய திருத்தோள்கள் வீரமுடையவை என்றதல்ை அவை பிரதாபம் உடையவை. என்பது சொல்லாமலே புலகுைம். ஈகையால் உண்டாகும். வண் புகழும் அவற்றிற்கு உண்டு என்று நக்கீரர் சொல் விரும். வீரர்கள் தம் வலிமையால் பெற்றவற்றைப் பிறருக்கு வழங்குவார்கள். தோளும் கையும் தொடர் புடையன. கையைத் தோள் என்று கூறுவதும் உண்டு. ஆதலின் வீரமும் ஈகையும் ஒருங்கே உடையவை அவை. அதனுல் பெறும் பிரதாபமும் கீர்த்தியும் அவற்றிற்கு, இருக்கின்றன. - வண்புகழ் கிறைந்தவை முருகன் திருத்தோள்கள். இத்தகைய தோள்கள் போர்க்களத்தில் செய்யும் செயல்: வியத்தற்குரியவை. படைக்கலங்களே எறிந்து பகைவர் மார்பைப் பிளந்து அவ்வாயுதங்களே வாங்கும் தோள்கள் - ه له (55لإقبي. செம்பொறி வாங்கிய மொய்ம்பின், சுடர்விடுபு வண்புகழ் கிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள். (மார்பில் உள்ள செம்மையான வரிகளே வாங்கிக் கொண்டவை, வலியை உடையவை, ஒளிவிடுபவை: வன்புகழ் கிறைந்தவை, படைக்கலங்களால் பகைவர்