பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 . திருமுருகாற்றுப்படை விளக்கம் ஆகவே ஆறுமுகங்களின் வாயிலாக முருகனுடைய செயல்களே விரித்தவர். அந்த அந்தச் செயல்களுக்குரிய தொழில்களைப் புரியும் திருக்கரங்கள் அந்த அந்த கிலக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதைச் சொல்ல வருகிருர், ஒவ் வொரு முகத்தின் செயலுக்கும் ஏற்றபடி, அந்த முகத்துக்கு இணேந்த இரண்டு கைகளின் கோலமும் பொருத்தமாக இருப்பதைக் காட்டுகிருர் . - முதலில் சொன்ன திருமுகம், 'மாயிருள் ஞாலம் மறு வின்றி விளங்க'ப் பல கதிரை விரியும்படி செய்வது. கதிரவ னுக்கும் திங்களுக்கும் விளக்குகளுக்கும் ஊற்றம் தந்து இருக்ளப்போக்கும் திருமுகம் அது. அதற்கு ஏற்ற காரியத் திலே ஈடுபடும் கோலத்தில் இரண்டு கைகள் உள்ளன. கதிரவன் வானவெளியில் பிரயாணம் செய்கிருன், கிழக்கே தோன்றி மேற்கே மறைகிருன். அவன் மேற் கொண்ட இந்தப் பயணத்தில் அவனுடைய செலவைத் தடுத்து கிறுத்தி அவனுக்கு இன்னல் விளைவிக்கச் சில அசுரர்கள் முயல்கிருர்கள். அவனே எதிர்த்துப் போரிடு கிருர்கள். அவர்களுக்கு மங்தேகாருணர் என்று பெயர். கதிரவன் அவர்களோடு போர் செய்து கொண்டே செல்கி ருன் . ஒரு புறம் அசுரர்களின் கொடுமையை எதிர்த்துப் போக்கியும் மற்ருெரு புறம் இருளேப்போக்கியும் அவன் வானத்தில் தன் தேரில் ஊர்ந்து செல்கிருன் உலகத்தில் உள்ள அந்தணுளர்கள் தாம் செய்யும் மூன்று வேளைச்சந்திக வரில் கதிரவனை நோக்கி அர்க்கியம் கொடுப்பார்கள். அவர் கள் கொடுக்கும் நீர் அம்பாக மாறிக் கதிரவைேடு பொரும் அசுரர்களே மாய்க்க உதவும் என்று கூறுவது ஒரு மரபு. கதிரவன் அசுரர்களோடு போர் இடுதலின் அவன் கதிர்கள் வெம்மையாக இருக்கின்றன. அவற்றின்