பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 153 வெம்மை முழுவதும் அப்படியே பூமியில் படிந்தால் உயிர்க் கூட்டங்களால் அதைத் தாங்க இயலாது. இப்பொழுதே .புழுக்கள் கதிரவன் வெம்மையைத் தாங்காமல் அழிகின்றன. "'என்பி லதனை வெயில்போலக் காயுமே” என்ற திருக்குறள் அதனே கினேப்பூட்டுகிறது அல்லவா? எனவே, கருணையை உடைய முனிவர் சிலர் அந்தக் .கதிர்களின் கடுமையைத் தாம் தாங்கிக்கொண்டு அக் கடுமை குறை பும்படி செய்கிருர்களாம். அவர்களே வால கில்லியர் என்று சிலரும், வேணுவியோர் என்று சிலரும் கூறுவர். உயிர்கள் இந்த வெம்மையைத் தாங்க இயலாதே என்ற பேரருளினல் இடை கின்று தாங்கும் முனிவர் களுக்கு, அதற்கு ஏற்ற வலிமையைத் தருவது அவர்க ஞடைய தவம் மட்டும் அன்று முருகப்பெருமானுடைய திருவருளும் அந்த வலிமையை வழங்குகிறது. உலகம் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என்ற கோக்கத்துடன் விளங்கும் திருமுகத்தைச் சார்ந்த திருக்கரங்களில் ஒன்று, மேலே நீண்டு அவர்களைப் பாதுகாக்கிறது. மற்ருெரு கையை முருகன் தன் இடையிலே வைத்துக் கொண் .டிருக்கிருன். - விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை. (வானத்திலே செல்லும் வழக்கத்தையுடைய முனிவர் களேப் பாதுகாக்கும் பொருட்டு மேலே எடுத்தது ஒரு திருக்கரம்; இடையிலே வைத்திருப்பது ஒரு திருக்கரம். மரபு-வழக்கம். ஐயர்-முனிவர். உக்கம்-இடை.)