பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருமுருகாற்றுப்படை விளக்கம் "ஒரு கை எக்காலமும் ஆகாயத்தே இயங்குதல் முறைமையினையுடைய தெய்வ இருடிகளுக்குப் பாது காவலாக எடுத்தது; ஏக்திய கைக்கு இணைந்த கை மருங்கிலே வைத்தது' என்றும், என்றது, ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தல் ஆற்ரு என்று கருதி, தமது அருளினல் சுடரொடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவரைப் பாதுகாக்கவே, உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. இதனனே இக் கை, மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்த முகத்திற்கு, ஏற்ற தொழில் செய்ததாயிற்று' என்றும், மனமும்முகமும் செய்தலின், ஏனைக் கை தொழிலின்றி மருங்கில் கிடந்தது" என்றும் கச்சினர்க்கின்ரியர் விளக்கினர். கதிரவனுடைய வெம்மையைத் தாங்கும் முனிவர் களேப் பற்றிய செய்திகள் வேறு பழைய தமிழ் நூல்களிலும் வருகின்றன. தாமப்பல் கண்ணனர் என்னும் புலவர், சோழன் கலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானைப் பாடுகிரு.ர். அவனுடைய பொறுமையைப் பாராட்டுகிருர். ஒரு. புருவுக்காகத் தன் ஊனே அரிந்து தந்த சிபிச் சக்கர வர்த்தியின் மரபில் வந்தவனே!’ என்று அந்தச் சோழனே விளிக்கிருர். சிபியின் பெருமையைச் சொல்லும்போது, சிவகாருண்யம் மிக்கவன் அவன் என்பதைப் புலப்படுத்த, அவன் சுடரொடு திரிதரும் முனிவருக்குச் சமானமானவன் என்று கூறுகிருர். 'நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால்உண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முளிவரும் மருள.' (புறநானூறு, 43)