பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 155. 'கிலத்தில் வாழ்கிறவர்களுக்குக் கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தால் விளேயும் துன்பம் நீங்கும்படி . யாக, சுடுகின்ற கதிர்களே உடைய சூரியனது வெப்பத் தைத் தாம் ஏற்றுக் கொண்டு, காற்றே தம் உணவாகக் கொண்டு. அச் சூரியனேடு சுற்றிவரும் விளங்கும் சடையை யுடைய முனிவரும் வியப்பை அடையும்படி என்பது இதன் பொருள். இதன் உரையில், முனிவர் என்றது வேணுவி" யோரை; அன்றிச் சுடர் திரிந்த வழித் திரிந்து தவம் செய்யும் முனிவர் என்றும் உரைப்ப' என்று கூறுவர் பழைய உரையாசிரியர். சிலப்பதிகாரத்திலும் இந்த முனிவர்களைப் பற்றிய செய்தி வருகிறது. பாலை கிலத்துத் தெய்வமாகிய துர்க்கை யைப் பரவுகின்றனர் வேட்டுவா. அப்போது அவர்கள் அப்பெருமாட்டி இந்த முனிவர்களுக்கு இடர் கெடும்படி அருளுவதாகப் பாடுகிருர்கள். 'சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும் இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்.” (சிலப்பதிகாரம், 12: 18.). அதற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லாரும், 'கதிர வனுடைய வெம்மை உயிர்களை வருத்தாமல், அவனைத் தாங்கி அவனுடனே சுழன்று திரிதலைச் செய்யும் தெய்வ இருடிகள்' என்று எழுதுகிரு.ர். இவ்வாறு, "காலுணவாகச் சுடரொடு கொட்கும். அவிர் சடை முனிவர்" என்று புறநானூற்றிலும், "சுடரொடு திரிதரு முனிவர்" என்று சிலப்பதிகாரத்திலும் வரும் முனிவர்களே இங்கே, "விண்செலல் மரபின் ஐயர்' என்று சொல்லப் பெறுகிரு.ர்கள்.